திமுக வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து மக்கள் ஏமாற்றம்… ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

ஆட்சி பொறுப்பேற்ற உடன் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கடந்த ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறியே திமுக அரசு தப்பித்து வருவதாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

திமுக வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து மக்கள் ஏமாற்றம்… ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் கூறுகையில், தமாக சார்பில் நடைபெறும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் கோட்டையில் உள்ளவர்கள் காதில் விழுந்துள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தலில் தமாக வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு பணியாற்ற வேண்டும் என்றார்.

மேலும் சென்னையில் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்றும், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று தான் மக்கள் நம்பி வாக்குகளை அளித்தார்கள், ஆனால் அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்த அவர், திமுக அரசு கடந்த ஆட்சி மற்றும் மத்திய அரசை குறை கூறி தனது வாக்குறுதிகளில் இருந்து தப்பித்து வருகின்றனர். அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று கூறிய வாசன், தேர்தலுக்கு முன்பு, பதவிக்கு வந்த உடன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு தற்போது 5 ஆண்டுகள் ஆகும் என்று கூறுவது ஏற்க முடியாது எனவும் பேசினார். தற்போது நகரம் முதல் கிராமம் வரை திமுக வாக்குறுதிகளை நம்பி மக்கள் காத்துகொண்டு இருக்கின்றனர் என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பிய அவர், நிதி இல்லை என்று கூறும் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நிதி பற்றாக்குறை பற்றி தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினார்எழுப்பினார்.

இந்நிலையில் ஆட்சி மாற்ற முடிவு மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்று சாடிய அவர், மேகதாது அணை கட்ட ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தார். மேலும் டெல்டா பகுதிகளில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி தமாக விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தொடக்கம் தான், தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தான் என்று கூறியும், அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்