வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 54 வகை ராக்கெட்...!

XL அளவு வகை ராக்கெட்டாக உள்ள பிஎஸ்எல்வி - சி 54 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது...
14 மாடி அளவு உயரம்
ராக்கெட்டுகளில் XL அளவு வகை ராக்கெட் ஆக உள்ள PSLV - C 54 கிட்டத்தட்ட 14 மாடி அளவு உயரம் கொண்டது. 321 டன் உந்துவிசையுடன் பூமியிலிருந்து கிளம்பும் இந்த பிரம்மாண்டம், தன்னுள்ளாக 9 செயற்கைக்கோள்களை எடுத்துக் கொண்டு 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்றுவட்ட பாதையில் அவற்றை நிலை நிறுத்தப் போகிறது.
பி.எஸ்.எல்.வி-யின் 56வது பயணம்
அதன்படி,போலார் சேட்டிலைட் லாஞ்சிங் வெகிக்கள் என அழைக்கப்படும் PSLV வகை ராக்கெட்டுகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ராக்கெட்டாகும். மிகவும் நம்பகத் தன்மையான ராக்கெட் ஆக அறியப்படும் பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 56 ஆவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேனோ வகை செயற்கை கோள்கள்
மேலும், புவியில் இருந்து ஏவப்பட்ட உடனேயே அண்டார்டிகா கண்டத்தை நோக்கியே விண்வெளிக்கு பயணம் செய்யும் இந்த வகை ராக்கெட்டுகள் மிகவும் துல்லியமாக செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த வல்லவை. அதன்படி, இதன் உள்ளாக மொத்தமாக ஒன்பது செயற்கைக்கோள்கள் வைத்து ஏவப்பட உள்ளது. அதில் 8 செயற்கை கோள்கள் நேனோ வகையை சேர்ந்த கோள்களாக உள்ளன.
பூட்டான் - இந்தியா கூட்டு தயாரிப்பு
முதலாவதாக எர்த் அப்சர்வேஷன் வகை செயற்கைக்கோளான ஓஷன் ஷர்ட் 3 மிகவும் முக்கியமான செயற்கைக்கோளாக உள்ளது. சுமார் ஒரு காரின் அளவான 1117 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட் இந்திய கடற்பரப்பை கண்காணிப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.
மேலும் படிக்க: நம்பகத்தன்மையற்ற நாடு அமெரிக்கா...எச்சரிக்கை விடுத்த முன்னாள் தளபதி..காரணம் என்ன?
மேலும், பூட்டான் - இந்தியா நாட்டின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கியுள்ள ins - 2B மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த எட்டு நேனோ செயற்கை கோள்களும் நாளை விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்த XL அளவு வகை ராக்கெட்டாக உள்ள பிஎஸ்எல்வி - சி 54 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். முன்னதாக, கடந்த நவம்பர் 18 ஆம் தேதி ”விக்ரம் எஸ்” விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ பாடகிகள் புகழ் பெற்றிருந்தாலும் அத்தனை பேரிடமும் இருந்து தனித்து, தனித்துவமாய் காணப்பெற்றவர்தான் வாணிஜெயராம்.
அனைத்து மொழிகளிலும்:
80-களின் காலகட்டம் என்பது முற்றிலும் வேறு மாதிரியானது. அந்த காலகட்டத்தை பொக்கிஷம் என கூறும் அளவுக்கு, பல கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தான் பாடும் பாடலின் வாயிலாக , ரசிகர்களின் காதுகளின் வழியாக மனதிற்குள் இறங்கி சென்று, மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், குழப்பம், புத்துணர்ச்சி, காமம் ஆகியவற்றை துளியும் குறையாமல் கடத்தி தன் குரலால் என்றைக்குமே தமிழ் மக்களை ஆண்டு கொண்டிருக்கும் ஓர் பாடகிதான் வாணி ஜெயராம். ரூபாய் நோட்டில் உள்ள அத்தனை மொழிகளிலுமே இவர் பாடிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கிறுகிறுக்க செய்திருக்கிறது.
சரஸ்வதியின் அருள்:
1945-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார் – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர்தான் வாணி ஜெயராம். இசைத்துறையை பின்னணியாக கொண்ட இந்த குடும்பத்தில் 9 குழந்தைகளில் 8-வது குழந்தையாக பிறந்த இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி. கலைமகள் சரஸ்வதியின் அருள் பெற்று விளங்கியதனாலேயே இவருக்கு கலைவாணி என பெயரிடப்பட்டது.
முதல் பாடலிலேயே...:
1971-ம் ஆண்டு இந்தியில் வெளியான குட்டி படத்தில் போலே ரே பப்பி ஹரா என்ற பாடலை பாடி திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். முதல் பாடலே அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இசையமைப்பாளர்களால் தேடப்படும் பாடகியாக உருவெடுத்தார்.
தேசிய விருதுகள்:
1975-ம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றவர் சங்காபரணம் படத்தின் பாடலுக்கும், ஸ்வாதி கிரணம் ஆகிய படத்தில் இடம் பெற்ற பாடலுக்கும் என மூன்று முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். இதுதவிர, பிலிம்பேர் விருது, நந்தி விருதுகள், பல்வேறு மாநில விருதுகளை அள்ளிய இவருக்கு நேற்று பத்மபூஷண் விருது என்ற உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ரசிகர்கள்:
கலை, அறிவியல், தோழி ரீதியாக சிறந்த விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 2023-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பாடகி வாணிஜெயராமுக்கும் பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது இந்திய அரசு. பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோருக்கு 10 வருடங்களுக்கு முன்பே பத்மபூஷண் விருது வழங்கப்பட்டாலும், வாணிஜெயராமுக்கு வழங்கியது தாமதமே என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இசைக்காகவே..:
தம் 77 ஆண்டு ஆயுட்காலத்தில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளை இசைக்காகவே அர்ப்பணித்து விட்ட வாணி ஜெயராம் தமிழ் சினிமா கண்டெடுத்த அதிசய பொக்கிஷம் என்றாலும் பொருத்தமானதாக இருக்கும். இப்பேர்பட்ட திறமைக்கு சொந்தக்காராக இருக்கும் வாணி ஜெயராம் தற்போது பாடல்கள் பாடுவதை தவிர்த்து வந்தாலும், ரசிகர்களால் தவிர்க்க முடியாத அளவுக்கு இதயத்தை ஆக்கிரமித்த ஓர் கலைப்பெட்டகம்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: முடிவுக்கு வந்த பயிற்றுநர்கள் போராட்டம்......
அன்றாடம் ஒவ்வொருவரின் வாழ்வும் ஒரு மிடறு டீ யில் இருந்து தான் தொடங்குகிறது. தேநீருக்கு ஒரு முழு நாளையும் உற்சாகத்துடன் மாற்றும் வல்லமை உள்ளது. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 டீ-க்கும் அதிகமாக குடிப்பவர்களையும் காண முடிகிறது. அதிலும் வகை வகையாக அதன் ருசியை கொஞ்சம் கொஞ்சமாக பருகும் போதும் ஒவ்வொரு துளி தொண்டையில் இறங்கும் போதும் பரவசம் காணலாம். இஞ்சி டீ, ஏலக்காய் டீ, புதினா டீ, கிரீன் டீ, ஹெர்பல் டீ, லெமன் டீ, மசாலா டீ, தந்தூரி டீ, மூலிகை டீ, செம்பருத்தி டீ என்று ருசியுடன் பலவகைகளில் டீ கிடைக்கிறது.
டீ பற்றிய வரலாறு:-
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தேயிலையானது, புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் வழியாக ஜப்பானுக்கும், அதன் பிறகு டச்சுக்காரர்கள் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. சுமார் 180 ஆண்டுகள் பழமையான தேயிலைத் தொழில் உற்பத்தியை இந்தியா கொண்டுள்ளது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் என்ற சிறப்புகளை பெற்றவைகளாகும். கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பலவகைப்படும்.
இதையும் படிக்க : கையுடன் இணைந்த டார்ச் லைட்...!
டீ குடிப்பதால் ஏற்படும் நன்மை என்ன தெரியுமா ?
இஞ்சி டீ குடிப்பதன் மூலம் உடல் புத்துணர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான சக்தி ஆகியவை கிடைக்கிறது. பிளாக் டீ யில் தோல் சார்ந்த பிரச்சனையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. உடல் பருமன் உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பது நலம் பயக்கும். பெண்களின் மாதவிடாய்க்காலங்களில் வலியை குறைப்பதற்கு மூலிகை தேநீர் உதவுகிறது. தோல் பளபளப்பை ஏற்படுத்த வெள்ளை டீ, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செம்பருத்தி டீ பருகலாம். இது போன்று பல நன்மைகளை டீ குடிப்பதன் மூலம் பெறலாம்.
டீ யின் சிறப்புகள் :-
* 17ம் நூற்றாண்டில் பிரபலமடைந்த தேயிலை இன்று எல்லோருடைய நாளிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
* ஜப்பான்,சீனா,வியட்நாம் போன்ற நாடுகளில் தேநீர் விழா கொண்டாடப்படுகிறது.
* அரசு விழாக்களில், மத விழாக்களில், நண்பர்கள் ஒன்றுகூடும் போது தேநீர் விருந்து நடத்துகின்றனர்.
* தேயிலை பற்றி படிக்கும் கலை படிப்பிற்கு டேசியோகிராபி என்று பெயர்.
ரொம்ப சோர்வாக இருக்கா கவலை படாதீங்க...கொஞ்சமா தலை வலிக்குதா சீக்கரமா சரி பண்ணிடலாம்
பிடிச்ச டீ எல்லாம் ருசி பாத்துடுங்க..ஏன்னா டீ குடிக்குறது ரிலாக்ஸ் தரும்...
- லாவண்யா ஜீவானந்தம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு, மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்க்கு ஒதுக்கிய திமுக :
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா அண்மையில் உயிரிழந்த நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்கே ஒதுக்கி திமுக அறிவித்தது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி :
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளாராக ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அறிவித்தது.
இதையும் படிக்க : 35 ஆண்டுகளுக்கு பிறகு...சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்...ஈவிகேஸ் இளங்கோவன்!
கூட்டணி கட்சிகளை சந்தித்த ஈவிகேஎஸ் :
இதனைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அடுத்ததாக மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ஆதரவு தருமாறு வலியுறுத்தி இருந்தார். அப்போது நிா்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தாா்.
நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவு அளிக்குமா?:
இந்த பின்னணியில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மநீம கட்சி ஆதரவு அளிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், மநீம கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு (கி) தேர்தலுக்கு மட்டும் ஆதரவு அளிக்குமா? அல்லது வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : ம.நீ.ம காங்கிரஸூக்கு ஆதரவா? இன்று அறிவிப்பு வெளியாகும்!
செயற்குழு கூட்டம் :
இந்த நிலையில், மநீம கட்சியின் அவசர நிா்வாகக்குழு - செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், கூட்டத்திற்கு பிறகு கமல்ஹாசன் தனது முடிவை அறிவிப்பார் என்று செய்திகள் வெளியானது.
காங்கிரஸ்க்கு ஆதரவு :
அதன்படி கூட்டத்திற்கு பிறகு, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார். மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் கூறினார்.
இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் :
தொடர்ந்து இந்த கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடருமா என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம் என்றும் விளக்கம் அளித்தார்.
குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு கலவரத்தின் போது இரண்டு குழந்தைகள் உட்பட 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை குஜராத் நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளது.
கோத்ரா ரயில்:
2002 பிப்ரவரி மாதம் அயோத்தியில் இருந்து இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ராவில் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் வகுப்புவாத கலவரம் வெடித்தது. பிப்ரவரி 27, 2002 அன்று நடந்த இந்த சம்பவத்தில் 59 பேர் இறந்தனர்.
ஆதாரம் இல்லை:
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால்சிங் சோலங்கி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் நீதிபதி ஹர்ஷ் திரிவேதி அமர்வு விடுதலை செய்துள்ளது எனவும் போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரையும் நிரபராதிகள் என அமர்வு நீதிமன்றம் அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குஜராத்தின் ஹலோல் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு தரப்பால்..:
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை அரசுத் தரப்பால் சேகரிக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோலங்கி கூறியுள்ளார். அரசு தரப்பில் கொண்டு வரப்பட்ட சாட்சிகளும் அவர்களது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். ஆற்றின் கரையில் இருந்து சில எலும்புகளை போலீசார் மீட்டிருந்த நிலையில் அந்த எலும்புகள் உயிரிழந்தவர்களின் எலும்புகள் என்பதை நிரூபிக்க முடியவில்லை எனவும் சோலங்கி தெரிவித்துள்ளார்.
தாமதமானதால்....:
கொலைகள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 2003 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால், இந்த வழக்கில் காவல்துறையின் பங்கும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றம் சாட்டியவர்களில் 8 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஒலிம்பிக்கில் வெளியேற்றப்படும் ரஷ்யா....காரணம் என்ன?!!!
இந்திய குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் நாளை அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கிறது.
தேநீர் விருந்து புறகணிப்பு :
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இதையும் படிக்க : தடுமாற்றத்தில் அதிமுக...எடப்பாடியை நிராகரிப்பார்கள்... தனியரசு பேச்சு!
தொடர் சர்ச்சையில் ஈடுபடும் ஆளுநர் :
கடந்த 23.01.2023 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுக்கிறார்.
பாஜகவின் கைப்பாவை :
ஆர்எஸ்எஸ் கொள்கைளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படும் இவர் திருந்துவதற்கு வாய்ப்பேதுமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாசிச பாஜக மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலாவது ஆளுரின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டுமென்று தனது அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.