சசிகலாவுடன் ஒரு மணி நேரம் பேசிய ஓபிஎஸ்!! விரைவில் ரிலீஸ் ஆகும் ஆடியோ... அல்லோல்பட்டு கிடக்கும் அதிமுக

சசிகலாவிடம் அதிமுக தலைமையில் ஒருவரான ஓ.பி.எஸ்ஸே ஒரு மணி நேரம் பேசிய ஆடியோ ஒன்று விரைவில் வெளியாகும் என சசிகலா ஆதரவாளர்கள் அதிரடி கிளப்பியுள்ளனர்.

சசிகலாவுடன் ஒரு மணி நேரம் பேசிய ஓபிஎஸ்!! விரைவில் ரிலீஸ் ஆகும் ஆடியோ... அல்லோல்பட்டு கிடக்கும் அதிமுக

சசிகலாவிடம் அதிமுக தலைமையில் ஒருவரான ஓ.பி.எஸ்ஸே ஒரு மணி நேரம் பேசிய ஆடியோ ஒன்று விரைவில் வெளியாகும் என சசிகலா ஆதரவாளர்கள் அதிரடி கிளப்பியுள்ளனர்.

சசிகலாவிடம் தொலைபேசி மூலம் பேசிய அதிமுக நிர்வாகிகள் 15 பேரை அதிமுக தலைமை கட்சியின் அடிப்படை தொண்டர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியது. ஏனேனில் அண்மை காலமாக சசிகலா தொண்டர்களிடம் பேசிய ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. அந்த ஆடியோக்களில் தான் விரைவில் அரசியலுக்கு வருவேன் எனவும், கொரோனா குறைந்த பின்பு தொண்டர்களை சந்திப்பேன் எனவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் எனவும் அதிரடி காட்டி வருகிறார்.

மேலும் சசிகலாஅதிமுக நிர்வாகிகளுடன் பேசி ஆடியோக்களை வெளியிட்டு எப்போது வேண்டுமானாலும் கட்சியைக் கைப்பற்றுவேன் என சொல்லாமல் சொல்லி வருகிறார். அதிமுக இரட்டை தலைமை இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியை விட்டு நீக்கினர். இந்த பட்டியலில் பெங்களூர் புகழேந்தியும் இருந்தது தான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

தற்போது வரை 41 ஆடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் அதில் அனைத்திலும் அரசியலுக்கு வருவேன், கட்சியை மீட்பேன், மக்களை விரைவில் சந்திப்பேன் என்ற வசனங்களும் இருந்தது கண்காணிக்க வேண்டியது. இந்த நிலையில் தான், சசிகலாவிடம் தொலைபேசி மூலம் பேசிய அதிமுக நிர்வாகிகள் 15 பேரை அதிமுக தலைமை நீக்கியது சரி என்றால், விரைவில் அதிமுக தலைமையில் ஒருவரான ஓ.பி.எஸ்ஸே சசிகலாவிடம் ஒரு மணி நேரம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகும் என பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

இது மட்டும் உண்மை என்றால் அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.