இந்து மதத்தின் பழங்கால மரபுகளுக்கு புத்துயிர் அளித்ததால் நித்யானந்தா அவர் பிறந்த நாட்டில் துன்புறுத்தப்பட்டார்...!!!

இந்து மதத்தின் பழங்கால மரபுகளுக்கு புத்துயிர் அளித்ததால் நித்யானந்தா அவர் பிறந்த நாட்டில் துன்புறுத்தப்பட்டார்...!!!

ஐக்கிய நாடுகள் சபையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.  இதில், ஒரு பெண் காவி உடை அணிந்து, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து, சாத்வி போல் முடியை கட்டியவாறு காட்சியளிக்கிறார்.  இந்தப் பெண் வேறு யாருமல்ல, இந்தியாவிலிருந்து தப்பியோடிய நித்யானந்தாவின் சீடராவார். 

கைலாசம்:

நித்யானந்தா மீது இந்தியாவில் பலாத்கார குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இங்கிருந்து தப்பிய நித்யானந்தா, அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே ஒரு தீவை வாங்கி, அதை 'இந்து தேசம்' என்று அறிவித்தார்.  இந்த நாட்டிற்கு ஐக்கிய நாடு ’கைலாசம்' என்று பெயரிட்டுள்ளது. 

வைரலாகும் சீடர்:

வைரலாகி வரும் நித்யானந்தாவின் சீடரின் பெயர் விஜயப்ரியா நித்யானந்தா.  ஐக்கிய நாடுகள் சபைக்கான கைலாசத்தின் நிரந்தரப் பிரதிநிதி விஜயப்ரியா என்று முன்பு கூறப்பட்டது.  யார் இந்த விஜயப்ரியா என்பதையும் உண்மையில் கைலாச நாட்டிற்கு ஐநா அங்கீகாரம் அளித்துள்ளதா என்பதையும் பார்க்கலாம். 

 நித்யானந்தா யார்?:

நித்யானந்தாவின் உண்மையான பெயர் ராஜசேகர்.  இவர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையை சேர்ந்தவர்.  நித்யானந்தா மீது பலாத்காரம், குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.  2019 ஆம் ஆண்டு நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே ஒரு தீவை வாங்கி அதை தனி நாடாக அறிவித்தார். 

புத்துயிர் அளித்ததால்:

இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கூட்டத்தில், விஜயப்ரியா நித்யானந்தா மற்றும் அவரது சகாக்கள் பலர் காவி உடையில் காணப்பட்டனர்.  அப்போது அங்கு பேசிய விஜயபிரியா இந்தியாவுக்கு எதிராக பல விஷங்களை கூறியுள்ளார். ஐ க்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழு ஏற்பாடு செய்த கலந்துரையாடலின் போது பேசிய விஜயப்ரியா இந்து மதத்தின் பழங்கால மரபுகளுக்கு புத்துயிர் அளித்ததற்காக நித்யானந்தா அவர் பிறந்த நாட்டில் துன்புறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

விஜயப்ரியா நித்யானந்தா யார்?:

சேலை மற்றும் தலைப்பாகை அணிந்து, நகைகளுடன் காணப்பட்ட விஜயப்ரியா நித்யானந்தா, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் தன்னை 'அமெரிக்காவுக்கான கைலாசத்தின் நிரந்தர தூதர்' என்று அறிமுகப்படுத்தினார்.  ஆனால், விஜயபிரியா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக பங்கேற்றதாக பின்னர் ஐக்கிய நாடுகள் சபை தெளிவுபடுத்தியுள்ளது.  கூட்டத்தில் விவாதிக்கப்படும் தலைப்புகளுக்குப் பிரதிநிதியின் பேச்சு சிறிதும் பொருத்தமற்றது என்று ஐ.நா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

நித்யானந்தாவின் நாட்டை ஐநா உண்மையிலேயே அங்கீகரித்துள்ளதா?:

ஐ.நாவிற்கான இணையதளத்தில் கைலாசத்தைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. விஜயபிரியாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியபோது, ​​ஐ.நா.வும் வெளியிட்ட அறிக்கையில் கைலாசத்தை ‘கற்பனை நாடு’ என்றே குறிப்பிட்டுள்ளது.  கைலாசவுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்கவில்லை என்பதும், விஜயப்ரியாவுக்கு ஐநாவில் நிரந்தர பிரதிநிதி அந்தஸ்தும் வழங்கப்படவில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பெரும்பான்மை இல்லை.... ஆட்சி அமைக்க காத்திருக்கிறோம்...!!!