
சுமார் 4 ஆண்டுகளாக உலகையே ஆட்டி வைத்த ஒரு சிறிய வைரஸ் தான், கொரோனாவின் 2019 வேரியண்டான கோவிட்-19. சீனா தொடங்கி உலகின் அனைத்து முக்குகளுக்கும் பரவி, பல லட்ச உயிர்களை சூரையாடிய இந்த வைரஸ் இத்தனை ஆண்டுகள் கழித்தும் பயம்புருத்தி வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
அதனையொட்டி, பாதுகாப்பாக இருக்க பல நாடுகளின் அரசே மக்களுக்கு வெளியே வர தடை விதித்திருந்தது. வீட்டுக்குளேயே இருக்க வேண்டும், வேலைகளையும் வீடுகளில் இருந்தே செய்ய வேண்டும் என்றெல்லாம் பல வகையான் அவிதிமுறைகள் விதிக்கப்பட்டன.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் இருந்து, இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். இந்நிலையில், ஒரு பெண், தனது 10 வயது குழந்தையை சுமார் 3 வருடங்களாக வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குர்காவுன் பகுதியில் 33 வயதான முன்முன் மாஜி என்பவர், கொரோனாவை நினைத்து மிகவும் பயத்தில் இருந்துள்ளார். அதனால், தனது அப்போதைய 7 வயது மகனை லாக்டவுன் கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு தான் வேலைக்குச் சென்றுவிட்டதாகவும், மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் அவர்களிடம் கூறினார்.
இதனை அருகில் இருந்தவர்கள் கவனித்து கேள்விகளை கேட்டு இந்த தகவலை சோசியல் மீடியாக்கள் மூலம் பரவ விட்டனர். தகவல் அறிந்து வந்த பெண்ணின் கணவர் காவல் துறையினர் உதவியுடன் அவகளை மீட்டனர்.
அப்போது அவர்களது அறையின் கோரத்தைப் பார்த்து அதிகாரிகளே கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது.