மனித நரம்புகளில் கிடைத்த ‘மைக்ரோ’ ப்ளாஸ்டிக் துகள்கள்...

சமீபத்திய ஆராய்ச்சிகளில் மனித நரம்புக்குள் மைக்ரோப்ளாஸ்டிக் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித நரம்புகளில் கிடைத்த ‘மைக்ரோ’ ப்ளாஸ்டிக் துகள்கள்...

முன்பை போல இல்லை. தற்போதெல்லாம் உணவு பொட்டலங்களில் அதுவும், ப்ளாஸ்டிக் பொட்டலங்களில் தான் வருகின்றன. ஆனால், அது வெறு வெளியில் இருக்கும் பாக்கெட்டுகள் தானே, அதில் என்ன என அலட்சியமாக விட்டு விட முடியாது. ஏன் என்றால், அந்த ப்ளாஸ்டிக் ஆனது அணு அளவிலும் உடைந்து மட்காததாக இருக்கிறது என்பது தான் அதன் சிறப்பாம்சமே.

அப்படிப்பட்ட ப்ளாஸ்டிக் நுன்துகள்கள் நமது உணவோடு கலந்து, நமது மனித ரத்த ஓட்டத்தில் கலந்துள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? உண்மை அது தான். மேலும் இந்த உண்மையை ஆராய்சியாளர்கள் நிரூபித்துள்ளனர் என்று கூறுவதை விட, தற்போது தான் ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடித்துள்ளனர் என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | பட்ஜெட்2023: ஒரு பார்வை!!

இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கற்பிக்கும் மருத்துவமனிகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, பல்கலைகழக மாணவர்கள் மற்றும் கல் யார்க் மருத்துவ பள்ளி சேர்ந்த மாணவர்கள் ஒரு ஆராய்ச்சி செய்துள்ளனர்.

மனிதர்களின் Saphenous Vein Tissue எனப்படும் சஃபீனஸ் சிரை திசு, கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை நடத்தும் ஒரு திசு குழுவாகும். அந்த திசு குழுவை எடுத்து ஆராய்ந்த போது, அதில் பல ப்ளாஸ்டிக் நுன்துகள்கள் இருந்துள்ளது.

மேலும் படிக்க | "பெண் சக்தியால் எப்படி வலுவான தேசத்தை கட்டியெழுப்ப முடியும்....." பட்ஜெட் குறித்து ஸ்மிருதி!!!

அதாவது ஒரு கிராம் திசுக்குள் சுமார் 15 மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமான உள்ளடக்கிய ப்ளாஸ்டிக் என்னவென்றால்:

  • வார்னிஷ், எனாமெல், சிந்தடிக் பெயிண்டுகளில் காணப்படும் அல்கைட் பிசின்

  • நைலான் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் பயன்படுத்தபடும் பாலிவினைல் அசிடேட் (PVAC) மற்றும்

  • நெகிழ்வான பேக்கேஜிங் பொருட்களில் பயன்படுத்தப்படும் EVOH மற்றும் EVA ஆகியவை.

இந்த திசுக்கள் பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக இருக்கும் நோயாளின் உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்குள் இவ்வளவு ப்ளாஸ்டிக் நடப்பது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய திரைப்பயணம்..... ஜெயிலரில் ரஜினியுடன்......

இது வரை, மைக்ரோப்ளாஸ்டிக் துகள்கள் உடலில் உள்ள உயிரியல் அணுக்கள் மற்றும் தடுப்புகளைத் தாண்டி நுழைய முடியுமா என்ற கேள்வி கூட எழுந்தது இல்லை. இந்நிலையில், இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ”தேர்தலே நோக்கம்... ஒவ்வொரு பிரிவையும்... அடிக்கப்பட்ட பழைய பறை....” பட்ஜெட்2023 எதிர்ப்பும் ஆதரவும்!!!