ட்விட்டருக்கு சவாலாக வருகிறது இன்ஸ்டா...! பயனாளர்களின் அதிருப்தி தான் காரணமா...?

ட்விட்டருக்கு சவாலாக வருகிறது இன்ஸ்டா...! பயனாளர்களின் அதிருப்தி தான் காரணமா...?
Published on
Updated on
2 min read

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்டை செய்து ட்விட்டருக்கு நிகராக தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக மெட்டா நிறுவனம் முயற்சி செய்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் பொழுதுபோக்கிற்காக  ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற  பிரபல சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அதன் நிறுவனங்களும் யூசர்களை அதிகரிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை கொடுத்து வருகிறது. 

அந்தவகையில் பார்த்தால், முதலில் உருவான பேஸ்புக்கையே பிறகு வந்த ட்விட்டர் வலைதளம் பின்னுக்கு தள்ளியது. ஏனென்றால், பேஸ்புக்கை காட்டிலும் ட்விட்டரில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்ததால் ட்விட்டர் வேகமாக யூசர்களை தன் பக்கம் ஈர்த்தது. இதனை முறியடிப்பதற்காகவே, கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் தனது குழுமத்துடன் இணைத்தது. இந்த செயலியில், யூசர்கள் தங்களது புகைப்படத்தையும், வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ளலாம். அதேசமயம் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட போது, டிக்டாக் பிரியர்கள் இன்ஸ்டாகிராம் செயலியில் டிக்டாக் செய்து வந்தனர். இந்த சிறப்பு அம்சங்கள் மூலம் இன்ஸ்டாகிராம் யூசர்களை வேகமாகவே அதிகரித்தது என்று சொல்லலாம். இருப்பினும், ட்விட்டர் செயலி தனது பெரும்பான்மையில் இருந்து இறங்காமல் இருந்தது.

ஆனால், கடந்தாண்டு ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் ட்விட்டர் பயனாளர்கள் சற்று அதிருப்தியில் இருக்கின்றனர். ட்விட்டர் செயலியில் தற்போது நடைபெறும் பல்வேறு குளறுபடிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ள மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்டை அறிவிக்க உள்ளது. 

இன்ஸ்டாகிராமில் பயனாளர்கள் இதுவரை வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வருகின்றனர். இனி இன்ஸ்டாவிலும் ட்விட்டரை போல் செய்திகளை TEXT களாக பதிவிடும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக, 1500 வார்த்தைகள் பதிவிடும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒரு செயலியாக உருவாகும் இந்த செயலி, இன்ஸ்டாகிராம் கணக்குகளை இணைக்கும் என்றும், ஜூன் மாதத்தில் இந்த செயலி அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தவுள்ள இந்த புதிய அப்டேட்டால், ட்விட்டர் நிறுவனத்துடன் மெட்டா நிறுவனம் போட்டியிடுகிறது. இதன்மூலம் இன்ஸ்டாகிராம் மற்ற செயலிகளில் இருந்து தனித்துவம் பெறும் என்று பயனாளர்களை கருத்து தெரிவிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com