பெண்களின் மார்பகத்தை பார்ப்பவருக்கு தான் அதில் நடிக்க தோணும்.. மீண்டும் அஜித்தை சீண்டும் மாறன்

பெண்களின் மார்பகத்தை காமவெறியுடன் பார்ப்பவன் கண்ணனிற்கு தான் இதில் நடிக்க தோணும் என்று தன்னை கழுவி ஊற்றிய அஜித் ரசிகர்களுக்கு மாறன் பதிலடி கொடுத்த பதிவு இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெண்களின் மார்பகத்தை பார்ப்பவருக்கு தான் அதில் நடிக்க தோணும்.. மீண்டும் அஜித்தை சீண்டும் மாறன்

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் இந்த மாறன். தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமாக  ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல் வன்மத்தை கக்கி வருபவர் தான் இவரது குல தொழிலே. 

இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

இவரின்  இயக்கத்தில் வெளியாகிய ஆண்டி இந்தியன் படம் வெளியாகி  கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திறமையை வைத்து தான் அடுத்தவர் திறமையை கேலி செய்தாயா? என ரசிகர்கள் அவரை வச்சி செய்த நிலையில், ஆன்டி இந்தியன் படத்திற்கு பின் இவர் விமர்சனம் செய்வாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், படம் எடுக்க சென்றாலும் மீண்டும் தனது விமர்சனம் என்ற பெயரில் தனது வன்மத்தை கக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இப்படி கக்கினால் தானே பிழைப்பு ஓடும் என்ன செய்வது? அவருக்கும் வேறு வேலை இல்லை. 


நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பிற்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி திரையரங்கில் வெளியான வலிமை படத்திற்கு  சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் நெகடிவ் விமர்சனம் கொடுத்திருந்தார். படத்தை விமர்சனம் என்ற பெயரில் என்ன என்னமோ பேசி உளறி வைத்திருந்தார்.

வலிமை படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல், அஜித்திற்கு மூஞ்சில் தொப்பை இருக்கு. படத்தை தயாரித்த போனி கபூர் தான் ஒரு சேட் என்றால் அஜித் பஜன் லால் சேட்டு மாதிரி கொழுக் முழுக்னு இருக்கார், அஜித்தின் நடனம் பரோட்டாவிற்கு மாவு பிசைவது போல இருப்பதாக மோசமாக விமர்சித்திருந்தார். 

இது அஜித் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவரது விமர்சனத்தை விட அஜித்தை உருவக் கேலி செய்து இருப்பதை குறிப்பிட்டு அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

 மேலும், விமர்சனம் என்ற பெயரில் Body Shaming செய்கிறார் என்று பலரும் இவரை விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, அஜித்தின் ’’ரெட்’’ படத்தில் இடம்பெற்ற ’’ஒல்லி குச்சி உடம்பு காரி’’ பாடலின் வரிகளை ஒப்பிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார் மாறன்.

ரெட் படத்தில் வரும் இந்தப் பாடலில் ஸ்லிம்மாக இருக்கும் கதாநாயகியைப் பார்த்து அஜித் பாடுவது என்ன ரகம்.?  உருவத்தை கேலி செய்யும் வரிகள் கொண்ட பாடலை பாடிய போது நீங்கள் எங்கே சென்றீர்கள்.? என கேள்வி கேட்டுள்ளார்.

 பெண்களின் மார்பகத்தை காமவெறியுடன் பார்ப்பவன் கண்ணனிற்கு மட்டுமே இப்படி எழுத தோன்றும் என்றும்,  அதில் நடிக்க தோன்றும் என்றும் தெரிவித்து இது வெறும் கற்பனை பாடல் அல்ல, ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு எனவும்,

ஆகவே உருவ கேலி படமெடுக்கும் வெண்ணெய்கள் திராணி இருந்தால் இப்படி பச்சயாக பாடல் எழுதுவோர் மற்றும் அதில் நடிப்போரை கண்டியுங்கள். இல்லாவிட்டால் மூடிக்கொண்டு இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.