மன்மதலீலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கிளுகிளுப்பில் டீன் ஏஜ் ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மன்மதலீலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, இளைஞர்கள் கிளுகிளுப்பில் உள்ளனர்.

மன்மதலீலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கிளுகிளுப்பில் டீன் ஏஜ் ரசிகர்கள்

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கும் படம் தான் மன்மத லீலை. அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
 
ஏற்கனவே கோவா திரைப்படத்தில் அடல்ட் காமெடி கதையை வெங்கட் பிரபு முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மன்மதலீலை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நடிகர் சிம்பு வெளியிட்டார்.  கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டதற்காக சிம்புவுக்கு நன்றி சொல்லி டுவிட் செய்த வெங்கட் பிரபு, அதில் ‘வசனமாடா முக்கியம் படத்த பாருடா’ மொமண்ட் என நக்கலாக பதிவிட்டுள்ளார். 

40 நிமிடம் ஓடக்கூடிய கிளிம்ப்ஸ் வீடியோவின் blackGround -யில் மன்மதலீலையை வென்றார் உண்டோ என பாகவதர் பாடல் ஓலிக்க, அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டை மற்றும் ரியா சுமனையும் மாறி மாறி லிப்லாக் அடிக்கிறார். 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஆத்தாடி என்னடா நடக்குது அங்க, அம்மாஞ்சி அசோக் செல்வனா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அசோக் செல்வன் நடித்தால், 3 இல்ல 2 ஹீரோயின் கூட தான் நடிப்பாரா என்றும் கேள்வியை கேட்டு வருகின்றனர்.

மன்மதலீலை முக்கிய அப்டேட் வருது வருதுனு சொன்னது. எல்லாம் லிப்லாக் அப்டேட் பற்றி தானா எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபுவிடமிருந்து, இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்று பல ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்தாலும், 

40 வினாடி வீடியோவே இப்படி இருக்குதுனா,  அப்போ படம் எப்படி இருக்கும் என்று படத்தின் அப்டேட்- காக சிலர் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் மன்மதலீலை படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக இயக்குநர் வெட்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

வெங்கட்பிரபுவின் 10வது படமான மன்மதலீலை க்ளிம்ப்ஸை பார்க்கும் ரசிகர்களுக்கு சென்சாரில் இந்த படம் எப்படி தப்பும் என்ற கேள்வியையும் கேட்டு வந்தனர். இதனால் ஓடிடியில் நேரடியாக மன்மதலீலை படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் திரையரங்களில் வெளியாகும் என அறிவித்து, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.