விரலால் தீண்டினாலும் அது பலாத்காரம் தான்: மனநலம் பாதித்த பெண்ணை சீரழித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை…  

உடல் உறவு வைக்காமல் விரலால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் பலாத்காரம் செய்வது போல் தான் என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு வழங்கியுள்ளது.

விரலால் தீண்டினாலும் அது பலாத்காரம் தான்: மனநலம் பாதித்த பெண்ணை சீரழித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை…   

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக செசன்ஸ் கோர்ட் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த இளைஞர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளைஞர் மேல்முறையீடு செய்த மனுவில், மனநலம் பாதித்த பெண்ணுடன் தான் உடலுறவு கொள்ளாத போது, எப்படி பாலியல் துன்புறுத்தல் என்று கூறுவது எனவும், நான் அந்த பெண்ணை தொட்டேனே தவிர உடலுறவு கொள்ளவில்லை என்றும் எனவே அதை பாலியல் துன்புறுத்தல் என்று கூற முடியாது என குறிப்பிட்டு இருந்தார்.

நீதிபதி ரேவதி மோகிதே அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், தடயவியல் ஆய்வில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிதான் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்பதை உறுதி செய்யும் ஆதாரங்களும் இருந்தது என விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் உடல் உறவு வைக்காமல் விரலால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் பலாத்காரம் செய்வது தான் எனவும், அதுவும் கற்பழிப்பு சட்டத்தின் கீழ் தான் வரும் என்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளனர். மேலும் அந்த இளைஞருக்கு கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை உறுதி செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.