விவசாயியை கேலி செய்த மகேந்திரா ஷோரூம் ஊழியர்..! நேரடியாக பிரச்னையில் தலையிட்ட ஆனந்த் மகேந்திரா..!

ஒரு மணி நேரத்தில் ரூ.10லட்சத்தை கொட்டிய விவசாயி..! அதிர்ந்து போன ஷோரூம் ஊழியர்..!

விவசாயியை கேலி செய்த மகேந்திரா ஷோரூம் ஊழியர்..! நேரடியாக பிரச்னையில் தலையிட்ட ஆனந்த் மகேந்திரா..!

விவசாயிகளை அவர்களின் தோற்றத்தை வைத்து கேலி கிண்டல் செய்வது நகரத்தை சேர்ந்த சிலரின் வழக்கம். குறிப்பாக பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் கார் ஷோரூம்களில் விவசாயிகளை பெரிதாக மதிப்பதில்லை. இதற்கான சான்று இன்று நேற்று அல்ல, 1900-களிலேயே நடந்துள்ளது. தற்போதைய ராஜஸ்தானாக உள்ள பகுதி அந்தக் காலத்தில் அல்வார் என அழைக்கப்பட்டது. இதனை 1920-களில் ஆண்ட மன்னர் ஜெய்சிங். இவர் ஒரு சமயம் தனது சாதாரன உடையில் லண்டன் சென்று அங்கு பாண்ட் தெருவில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம்க்குள் சென்றுள்ளார். அங்கிருந்த சொகுசு காரின் சிறப்பம்சங்கள் குறித்தும், விலை குறித்தும் கேட்க முடிவு செய்து உள்ளே சென்ற அவரின் தோற்றத்தை வைத்து அவர் ஒரு மன்னர் என்பதை அறியாத அந்த ஷோரூமின் விற்பனையாளர் அவருக்கு மரியாதை அளிக்காமல் வெளியேறும் படி கூறிவிட்டார். இதனையடுத்து மன்னராக தனது உடையை அணிந்து கொண்டு முறைப்படி அங்கு சென்றவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷோரூமில் இருந்த 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கிய மன்னர், இந்தியா திரும்பி அந்த கார்களின் இருபுறத்திலும் துடைப்பத்தை கட்டி, சாலைகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். 

இதனால் உலகம் முழுவதும் ரோல்ஸ் ராய்ஸின் விற்பனை பாதிக்கப்படவே, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், மேலும் 6 கார்களை அவருக்கு பரிசாக அளித்ததாக ஒரு கதை உண்டு. அதேபோல சரத்குமார், விஜயகுமார் நடிப்பில் வெளியான நட்புக்காக படத்திலும் இதே போன்று கார் ஷோருமில் இருவரும் அசிங்கப்படுத்தப்படுவர், பிறகு அவர்களின் மதிப்பு அறிந்து மரியாதையாக நடத்தப்படுவர். இப்போது ஏன் இவற்றை நாம் பேசுகிறோம் என்றால், இதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் மகேந்திரா கார் ஷோருமிலும் நடைபெற்று இருக்கிறது. இந்தப் பஞ்சாயத்தில் நேரடியாக ஆனந்த் மகேந்திராவே நேரடியாக தலையிட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

கர்நாடகாவின் துமகுருவை சேர்ந்த கெம்பேகவுடா என்ற விவசாயி பொலிரோ பிக்-அப் கார் குறித்து விசாரிக்கத் தனது பகுதியில் உள்ள மஹேந்திரா ஷோரூமூக்கு சென்றுள்ளார். அங்கே விவசாயியின் எளிமையான தோற்றத்தைப் பார்த்து சேல்ஸ்மேன் அவரை மரியாதை குறைவாக நடத்தியதோடு, காரில் விலை குறித்து கேட்டதற்கும் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக விவசாயி கெம்பேகவுடாவை பார்த்து அந்த சேல்ஸ்மேன் நக்கலாக, " நீ கார் வாங்க போறியா.. இதோட விலை என்ன தெரியுமா? ரூ 10 லட்சம். உன் பாக்கெட்ல குறைந்தது 10 ரூபாய் இருக்கா? நீயெல்லாம் எதற்கு இங்க வறீங்க. சீக்கிரம் வெளியே கிளம்பு'' என்று அநாகரிகமாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி ஒரு மணி நேரத்தில் 10 லட்ச ரூபாய் பணத்தை ரெடி செய்து வருவதாகச் சவால் விட்டு சென்று, நண்பர்களின் உதவியோடு 10 லட்ச ரூபாயை கொண்டு வந்து அந்த சேல்ஸ்மேனிடம் கொடுத்து உடனடியாக காரை டெலிவரி செய்யும்  படி கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன அந்த சேல்ஸ்மேன், உடனே காரை டெலிவரி கொடுக்க முடியாது காத்திருப்பு பட்டியலில் தான் வைத்திருப்போம், உரிய நேரம் வந்ததும் கார் டெலிவரி செய்யப்படும் என கூறினார். இதனால் அந்த விவசாயிக்கும், அந்த சேல்ஸ்மேனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விவசாயியிடம் அநாகரிகமான முறையில் பேசிய அந்த சேல்ஸ்மேன் மன்னிப்பு கோரினார். அப்போது தனக்கு அந்த ஷோரூமில் கார் வங்க விருப்பமில்லை என விவசாயி பதிலடி கொடுத்தார். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயியை அவமானப்படுத்திய அந்த சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலர் ட்விட்டரில் ஆன்ந்த் மகேந்திராவை டேக் செய்து கருத்துகளை பதிவிட்டனர். இதற்கு ஆன்ந்த் மகேந்திராவும் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஏற்கனவே மகேந்திரா மற்றும் மஹேந்திராவின் சிஇஓ வீஜய் நக்ரா ஆகியோர் வெளியிட்டிருந்த அறிக்கையை பகிர்ந்துள்ளார்.

அவர்களின் அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான அனுபவத்தை வழங்குவதில் டீலர்களும் முக்கிய பங்கு உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மரியாதை மற்றும் கண்ணியமாக நடத்தப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்த அறிவிப்பை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ள ஆனந்த் மகேந்திரா, "அனைத்து தரப்பினரையும் முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பதே மஹேந்திரா நிறுவனத்தின் நோக்கம். அனைத்துத் தனிநபர்களின் கண்ணியத்தைக் காப்பது எங்களின் மிக முக்கிய கொள்கை. இதில் எதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் கூட அதைச் சரி செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். தனது ஷோரூமில் எழுந்த பிரச்சினை குறித்து 24 மணி நேரத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். ஆன்ந்த் மகேந்திராவின் இந்த பதிவுக்கும், அவரது உடனடி நடவடிக்கைக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.