’’கிட்னி முக்கியமா..? மகள் முக்கியமா..? - ஆப்கானில் தாண்டவமாடும் உணவு பற்றாக்குறை!!

ஆப்கானிஸ்தானில் தொடரும் உணவு பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் தங்களின் உடல் உறுப்புகளை விற்கும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது.

’’கிட்னி முக்கியமா..? மகள் முக்கியமா..? - ஆப்கானில் தாண்டவமாடும் உணவு பற்றாக்குறை!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதும், அங்கு பொருளாதாரம் நெருக்கடி மிகவும் மோசமடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உணவு பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் அல்லது உடல் உறுப்புகளை விற்கும் மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி வந்த பிறகு, பெண்கள் வீட்டை விட்டு தனியாக செல்லக்கூடாது. ஆண்கள் துணையோடு தான் வெளியே செல்ல வேண்டும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியவர்கள் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பையும் தடுத்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து தலிப்பான்கள் அந்நாட்டு சிறுமிகளுக்கு கல்வி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கான பள்ளிகூடங்களையும் மூடி வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு மிகமோசமான உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களின் ஆட்சிக்கு முன்னதாகவே அங்கு 80 சதவீத மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு போதுமான உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் நிலை 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் உட்டக்கட்டமாக தற்போது ஆப்கான் மக்கள் பசிக்கொடுமையால் தங்களின் உடல் உறுப்புகளையும், பெற்ற குழந்தைகளையும் விற்று, உணவு உண்ணும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதிலும் குழந்தைகளின் நிலைமை மிக மோசமாகி வருவதால், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சாவின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா-வின் குழந்தைகள் பாதுகாப்புக்கான யூனிசெஃப் அமைப்பு
அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5 வயது சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் சிறுநீரகத்தை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உணவு உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழ்நிலையில் 'நான் என்னுடைய கிட்னியை விற்கவில்லை என்றால், என் மகளை விற்க நேரிடும்' என ஒரு குழந்தையின் தந்தை உருக்கத்துடன் தெரிவித்துள்ள செய்தி கேட்போரை சோகத்தின் உச்சிற்கு கொண்டு செல்கிறது.