மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருகிறதா...? குடியரசு தினத்தையொட்டி அறிவிப்பு வெளியாகிறது

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருகிறதா...? குடியரசு தினத்தையொட்டி அறிவிப்பு வெளியாகிறது

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருவதாகவும் குடியரசு தினத்தையொட்டி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Published on

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில் பிட்மென்ட் காரணி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் பிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக அதிகரிக்கவும், அதே சமயம் மத்திய அரசு 7-வது ஊதியக்குழு திட்டத்தை  நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும், அடிப்படை சம்பளம் உயர்வதால், அகவிலைப்படியும் 31 சதவீதம் அளவில் உயரும். இதற்கான அறிவிப்பு வரும் குடியரசு தினத்தையொட்டி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com