தாய் வீட்டிற்கே திரும்புகிறாரா டாக்டர் சரவணன்... டாக்டருக்கு வந்த க்ரீன் சிக்னல்!!

தாய் வீட்டிற்கே திரும்புகிறாரா டாக்டர் சரவணன்... டாக்டருக்கு வந்த க்ரீன் சிக்னல்!!

மதுரையின் டாக்டர் சரவணன் தற்போது பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் எந்த கட்சியில் இணைய போகிறார் என்ற யூகங்கள் மக்களிடையே பலவிதமாக எழுந்துள்ளது. 

எந்த பக்கம்:

டாக்டர் சரவணன் திமுகவில் சேரப்போகிறாரா ஓபிஎஸ்ஸுடன் இணையப் போகிறாரா இல்லை மீண்டும் பாஜகவிற்கே செல்லுவாரா என பல கேள்விகள் எழுந்த நிலையில் அவருக்கு முக்கிய தலைவரிடமிருந்து க்ரீம் சிக்னல் வந்துள்ளது.

சேவை உள்ளம்:

டாக்டர் சரவணன் இயல்பாகவே அவரது தொகுதி மக்களிடம் நல்ல பெயர் பெற்றவர்.  மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்.  கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்காக சிறப்பான சேவை செய்தவர்.  அதை மக்கள் ஒருபோதும் மறக்க முடியாது.

துரோக அரசியல்:

சரவணன் அவரது சேவை மனப்பான்மையால் பலராலும் அறியப்பட்டாலும் சந்தர்ப்ப அரசியல்வாதி எனவும் துரோக அரசியல் செய்பவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.  கட்சியில் சீட் தரவில்லை என்பதற்காகவும் கட்சி விட்டு கட்சி தாவி கொண்டே இருந்தார் டாக்டர் சரவணன்.  கடந்த ஒரு மாத காலமாகவே அவர் திமுகவிற்கு செல்லவுள்ளார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்திற்குள் சுற்றி வருகின்றன.

விசேஷ வீட்டில்:

இந்நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்களே டாக்டர் சரவணனுக்கு எதிராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இப்படிப்பட்ட சூழலில் அவரது வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ் அழைக்கப்பட்டு அவருக்கு தனியாக பேனர்கள் வைக்கப்பட்டது.  தொண்டர்கள் எவரது குறிப்பிடப்படாத நிலையில் சரவணனது பெயரை மட்டுமே அந்த பேனரில் அச்சிடப்படிருந்தது.  இதனால் அவர் ஓபிஎஸ் பக்கம் செல்லவுள்ளார் என பேசப்பட்டது.

மகனின் திருமணம்:

இதே சமயம் பி.டி.ஆர் தலைமையில் நடைபெற்ற அவரது மகன் திருமணத்தில் பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  இதிலிருந்து சரவணன் மீதான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.  மேலும் இது ஒரு பொதுவான நிகழ்ச்சி என்பதால் ஓபிஎஸ்ஸும் கலந்து கொண்டார் எனக் கூறி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

க்ரீன் சிக்னல்:

மகனின் திருமணத்திற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது.  தற்போது அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.  அவரது மகன் திருமணத்திற்கு முதலமைச்சர் வாழ்த்து மடல் அனுப்பி கட்சியில் இணைய க்ரீன் சிக்னல் அனுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.  விரைவில் டாக்டர் சரவணன் திமுகவில் இணைவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   நீங்க யாருனு மக்களுக்கு தெரியும்..!! இபிஎஸ்ஸின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்த முரசொலி!!!