மோதலுக்கு தயாராக இருப்பவரா முதலமைச்சர்....முரசொலியின் விளக்கம் என்ன?!!

மோதலுக்கு தயாராக இருப்பவரா முதலமைச்சர்....முரசொலியின் விளக்கம் என்ன?!!

முதலமைச்சர் மோதல்களை தவிர்ப்பவரே தவிர, மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல.  ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்றது குறித்து முரசொலியில் விளக்கம்.

இன்றைய முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையின் ஒரு பகுதியில், 

ஆளுநருக்கும் அரசுக்கும் அண்மை காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதனால் ஆளுநரை விழாவுக்கு அரசு அழைக்குமா ? குடியரசு நாளில் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு முதலமைச்சர் செல்வாரா ? என்ற சந்தேகங்கள் சூழ்ந்திருந்தன.

அதற்கு ஆளுநரும் இடம் கொடுக்கவில்லை, தேநீர் விருந்துக்காண அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற அரசியலமைப்பு சட்ட ரீதியான பெயரை பதிவு செய்ததுடன் முதலமைச்சருக்கு அழைப்பிதழை முறைப்படி அனுப்பி தொலைபேசியில் முதல்வருடன் பேசி ஆளுநர்  அழைப்பு விடுத்தார்.  முதலமைச்சரும் பிற பிரச்சனைகளில் கையாளும் பெருந்தன்மையுடன் கூடிய பெரும்பான்மையான அணுகு முறையினையே குடியரசு நாளை ஒட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார்.

நமது முதலமைச்சர் மோதல்களை தவிர்ப்பவரே தவிர, மோதலுக்கு தயாராக இருப்பவர் அல்ல.  அவருக்கு ஒவ்வொரு பிரச்சனையின் பரிணாமம்தான் முக்கியமே அன்றி, அதற்கு காரண கர்த்தாக்களைப் பற்றி கவலைப்படவோ, அலட்டிக் கொள்ளவோ மாட்டார்.  எப்போதும் அவரது கண்களுக்கு தெரிவதெல்லாம் சீரான ஆட்சி நிர்வாகம் மற்றும் வெகு மக்களுக்கு நாளும் ஆற்ற வேண்டிய நற்பணி தான்.

இவ்வாறு கூட்டணி கட்சிகள் புறக்கணித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்து கொண்டமைக்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  நான்காயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள்......