தபால்கள், கடிதங்கள், தந்தி, செய்தித்தாள், அலாரம் தொடங்கி, சமீபத்தில் புழக்கத்திற்கு வந்த இ-மெயில் உட்பட அனைத்தையும் கட்டுக்குள் வைக்கும் விதத்தில் உருவெடுத்து நிற்கிறது செல்போன்கள். நம்மையே மிஞ்சும் அளவில் வேலை செய்வதாலோ என்னவோ, அதனை செல் போன் என சொல்வது நிறுத்தப்பட்டு ஸ்மார்ட்போன் என பெயர் சூட்டினோம்.
எது வேண்டுமானாலும், அதனை ஒரு செயலியாக மாற்றி, அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஒரு க்ளிக் போதுமானதாக இருக்கிறது. இருந்தாலும், ஒரு சிறிய தகவலுக்காக இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள், 1008 அனுமதிகளைக் கேட்கும். சாதாரண அலாரம் செயலிக்கூட, தற்போது, அழைப்புகளை பயன்படுத்த அனுமதி கேட்கிறது. நாமும், எதையும் பார்க்காமல் அனைத்தையும் அனுமதித்து இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். பல செயலிகள் கேமராவைப் பயன்படுத்தவும் அனுமதி கேட்கும். ஆனால், அதெல்லாம் எதற்காக என என்றாவது யோசித்தது உண்டா?
சமீபத்தில், ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், வெறும் ஒரு நிமிடம், அதாவது, 60 விநாடிகள் போதுமாம். நமது அனைத்து தகவல்களையும் உரித்தெடுக்க!!! நம்ப முடியவில்லையா? ஆனால், அது தான் நிஜம். ஒரு நிமிடம் வரை செயலியை பயன்படுத்துவதன் மூலம், அந்த செயலியின் பயணாளரைப் பற்றிய அனைத்து தகவல்களும் முழுவதுமாக எடுக்க முடியுமாம். இது அந்த ஆய்வின் அறிக்கை கூறுகிறது.
அட்லாண்டாவில் உள்ள ஜார்ஜியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆராய்ச்சியாளர், சர்வான் அலி என்பவர் நடத்திய ஆய்வில், ஸ்மார்ட்போன் சென்சார்களில் இருந்து தரவுகளில் மெஷின் லேர்னிங் (எம்எல்) அல்காரிதம்களைப் பயன்படுத்தி, பயனர்களைப் பற்றிய கணிப்புகளை உருவாக்கியது, இதனால் "தனியுரிமை மீறல்" சாத்தியத்தை எடுத்துக்காட்டுகிறது எனக் கூறப்படுகிறது.
மெஷின் லேர்னிங் என்றால் என்ன?
ஏ.ஐ, அதாவது செயற்கை நுண்ணறிவு தான் தற்போது அனைத்து கருவிகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது. தனது வேலைகளை இந்த செயற்கை நுண்ணறிவு செய்ய, பயன்படுத்தும் முறை தான் இந்த மெஷின் லேர்னிங். நாம் கொடுக்கும் தகவ்ல்களை வைத்து, அதன் வெளிப்பாடை கணிக்கும் வேலை தான் ஒரு ஏ.ஐ-யுடையது. அப்படி ஏற்கனவே இருக்கும் தகவல்களின் அடிப்படை வைத்து, தானாகவே வெளிப்பாடுகளைக் கணிக்கும் முறைதான் இந்த மெஷின் லேர்னிங். அதாவது எளிதாக சொல்லவேண்டும் என்றால், எந்த கருவியைப் பயன்படுத்துகிறோமோ, அதன் செய்ல்பாட்டை கணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் முறை தான் இந்த மெஷின் லேர்னிங்.
இத்தகைய மெஷின் லேர்னிங் கொடுக்கும் தகவல்களை வைத்தே, ரு செயலியின் பயணர் குறித்து நம்மால் கணிக்க முடியுமாம். அந்த கணிப்பு, அதிகப்டச துல்லியமானதாக இருக்கும் பட்சத்தில், இது ஒரு தனி மனித உரிமையின் மீறலாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்த அலி, ஒரு நபரைப் பற்றி தெரியாமலேயே, அவரைப் பற்றிய தகவல்களை சென்சார்கள் மூலம் கண்டுபிடிக்க முடிகிறது எனக் கூறுகிறார். இதனால், நாம் பயன்படுத்தும் செயலிகளில், சென்சாரைப் பயன்படுத்தும் செயலிகளை மட்டும் பாதுகாப்பாக கையாள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார்.
மேலும் படிக்க | ஆம் ஆத்மியை வீழ்த்த பாஜகவின் அரசியல் ஆயுதம்...!!!!!
அது எப்படி கண்டுபிடிக்க முடியும்?
ஒரு செயலியை பயன்படுத்துவதன் மூலம், அதில் இருக்கும் சென்சார்களை ஆய்வு செய்தால், அதில், பயணி எந்த செயலியை, எவ்வளவு நேரம் பயன்படுத்தி இருக்கிறார், அவரது வயது என்ன? அவர் வலது கை பழக்கம் கொண்டவரா அல்லது இடது கையா என்பதையும் தெரிந்துக்கொள்ளலாமாம். அதுமட்டுமின்றி, அந்த நபர், எந்த பாலினம், வயது, போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ளலாமாம்.
இதன் மூலம், நாம் செய்யும் அனைத்துமே தகவல்களாக சேகரிக்கப்படுகிரது என்பதும், நாம் தான் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த செயலியை பயன்படுத்தினோம் போன்ற தகவல்களும் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனால், எங்கும் நமக்கு பாதுகாப்பு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
மேலும் படிக்க | ஆர்டிஐ கேள்விகளுக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதிலளித்தால்.....!!!