நடிகை கத்ரினா கைஃப் இரண்டு மாத கர்ப்பமா ? போட்டோவை பார்த்து மகிழும் ரசிகர்கள்..!

நடிகை கத்ரினா கைஃப் கர்ப்பமா இருக்கிறாரா என்ற சந்தேகம் தான் கடந்த சில நாட்களாக பாலிவுட்டிலும், அவரது ரசிகர்களிடமும் கிளம்பி உள்ளது. இது வரை இதற்கு கத்ரினா எந்த விளக்கமும் அளிக்காததால் அது குறித்த பல விதமான செய்திகள் வெளிவந்து கொண்டு உள்ளது.

நடிகை கத்ரினா கைஃப் இரண்டு மாத கர்ப்பமா ? போட்டோவை பார்த்து மகிழும் ரசிகர்கள்..!

பாலிவுட் டாப் நடிகை கத்ரினா கைஃப்புக்கும், நடிகர் விக்கி கெளசலும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். காதலிக்கும் பொது பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று நெருக்கமான போட்டோக்களை வெளியிட்டு வந்த இந்த ஜோடி, திருமணத்திற்கு பிறகும் தனது கணவருடன் சேந்து கிளாமர் போட்டோஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் வெளியிட அது செம்ம வைரல் ஆகி வருகின்றது. 

சமீபத்தில் மாலத்தீவு சென்ற போது கத்ரினா கைஃப், கடற்கரையில் பிகினியில் ஜாலியாக பொழுதை கழித்த போட்டோக்களை வெளியிட்டார். இந்த போட்டோ வைரலானது. திருமணத்திற்கு பிறகும் இப்படி கவர்ச்சி போட்டோக்களை தாராளமாக வெளியிட்டு வருகிறாரே என பலரும் கேட்டு வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மும்பை விமான நிலையத்திற்கு தனியாக வந்த கத்ரினா கைஃப், மிக எளிமையாக பிங்க் கலரில் லூசான சுடிதார் அணிந்து வந்தார். மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்தாலும் அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள், கத்ரினாவா இது, இப்படி சிம்பிளாக, அதுவும் முழுவதுமாக கவர் செய்த உடையில் வந்திருக்கிறாரா என ஆச்சரியமாக கேட்க துவங்கி விட்டனர். 

கத்ரினாவின் இந்த போட்டோ வெளியானதை பார்த்த இணையதளவாசிகள், கத்ரினா முழு நேர குடும்ப பெண்ணாக மாறி விட்டார் போல. ஒருவேளை அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ. விரைவில் அம்மா ஆக போகிறாரா. கத்ரினாவின் குழந்தையை பார்க்க ஆவலாக உள்ளதாக பலரும் கமெண்ட் செய்ய துவங்கி விட்டனர். கத்ரினா தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் கத்ரினா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை. கத்ரினா விரைவில் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாகவும், இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதம் ஆகி விட்டதால், சமீப காலமாக லூசான ஆடைகளையே உடுத்தி வருவதாலும் பலர் இதை கன்ஃபார்ம் செய்து விட்டனர். திருமணத்திற்கு பிறகு குழந்தையை விரும்புவதாக முன்பே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் கத்ரினா.

சமீபத்தில் கத்ரினாவும், விக்கியும் சுற்றுலாவிற்காக அமெரிக்கா சென்றபோது நீச்சல் குளத்தில் இருவரும் கட்டிபிடித்தபடி நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டதால் கத்ரினாவின் கர்ப்பம் பற்றிய தகவல் அதிகமாக பரவ துவங்கியது. ஆனால் காத்திராவின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வெளியான செய்திகள் கூறுவது என்ன என்றால், கத்ரீனா கர்ப்பமாக இல்லையாம், தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் ஆரம்ப கால திருமண வாழ்க்கையை அனுபவிக்க இந்த தம்பதி முடிவு செய்து உள்ளதாம். 

கத்ரினா தற்போது விஜய் சேதுபதியுடன் ஹேப்பி கிறிஸ்துமஸ், சல்மான் கானுடன் டைகர் ஆகிய படங்களின் ஷுட்டிங்கில் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார். இதில் டைகர் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்கி கெளசல், கோவிந்தா நாம் மேரா, ரெளலா ஆகிய படங்களில் நடித்து வருகின்றனர்.