இந்தியாவில் ஒரு குடும்பம் ஒரு குழந்தை  திட்டமா..?

இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற திட்டத்தை உறுதி செய்யும் வகையில் மசோதா கொண்டு வர திட்டம்..இந்த திட்டம் சாத்தியமா..? இந்த திட்டத்தை யார் கூறியது இதற்கான காரணம் என்ன என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...

இந்தியாவில் ஒரு குடும்பம் ஒரு குழந்தை  திட்டமா..?

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது எளிதான காரியம் அல்ல! பல ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சரியான திட்டமிடல் இருந்தால் மட்டுமே வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீன கருதியது. அதன் தொடக்கமாக கடந்த 1979-ஆம் ஆண்டு ஒரு குடும்பம் ஒரு குழந்தை எனும் கொள்கையை சீன அரசு அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் சீன அரசின் யோசனை சமயோஜிதமாக இருந்தாலும். ஒரு கட்டத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

இதன் விளைவாக ஒரு கட்டத்தில் இத்திட்டத்தை கடைபிடிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு அந்நாடு வந்தது. இந்நிலையில் ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்தக்கோரி சில அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இவை இன்று.. நேற்று.. தொடங்கிய குரல் அல்ல.. 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரகலாத் சிங் பட்டேல் மசோதாவை கொண்டு வந்தார். ஆனால் பலரின் எதிர்ப்பின் காரணமாக அப்போது வாக்கெடுப்புக்கு கூட வராமல் போனது. இந்நிலையில் தற்போது இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சருமான ராமதாஸ் அத்வாலே விரைவில் "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" திட்டத்தை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர பிரதமர் மோடியிடம் எழுத்துபூர்வமாக கோரிக்கை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை கடந்த 20,30 வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது இல்லை. மேலும் பல்வேறு காலச்சூழல்களால் கருவுறுதல் வீதமும் குறைந்துள்ளது. 2000ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு கருவுறுதல் விகிதம் 3.3 ஆக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் இவை 2.1ஆக குறைந்துள்ளது. சீனாவின் ஒரு குழந்தை கொள்கையை விமர்சித்த இந்தியா தற்போது இந்த திட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.