புதின் மரண பீதியில் இருக்கிறாரா? அப்போ அவ்வளவு தானா?
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் தொடர்ந்து, தற்போது மாபெரும் அறிவிப்பை புதின் வெளியிட இருக்கிறார் என்ற தகவல் உலக மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ரஷியர்கள் புதினுக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர்.

உலகமே தன்னை எதிர்த்து நின்றாலும், உண்மைக்காக போராடுபவனே தலைவனாகிறான் என, பல படங்களிலும், வரலாற்று கதைகளிலும் நாம் கேட்டது உண்டு. ஆனால், தவறான பாதையில் அவனே சென்றால், அவனுக்கு துணையாக யாரும் இல்லை என்றால், அவனாக திருந்தினால் மட்டுமே அவனை காக்க முடியும். இல்லையென்றால், அவன் தனது ஆணவத்தாலேயே அழிந்து விடுவான் என நமது நிகழ்காலத்தில் ஓர் உலகத் தலைவர் உதாரணமாக வாழ்ந்து, மக்களுக்கு பாடங்கள் புகட்டி வருகிறார் போலும்.
மக்களில் இருந்து முளைத்த, மக்களை வழிகாட்டும் ஒருவன் தான் தலைவன். அவர்களை சரியான பாதையில் அழைத்து சென்று அவர்களை, தன் உயிர் போகும் வரை பாதுகாப்பவன் தான் சிறந்த தலைவன். ஆனால், இங்கு ரஷ்ய தலைவரான பிரதமர் விளாடிமிர் புதின், மக்களை அழிவு பாதைக்கு அழைத்து செல்வதோடு, உலக அமைதியையும் கெடுத்து வருகிறார் என்ற அவப் பெயர் சூடி நிற்கிறார்.
Putin promising a few months back that mobilization won’t happen. Hall of Fame liar. https://t.co/13rtBvermr
— Dr. Ian Garner (@irgarner) September 21, 2022
தனது நாட்டின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனை மீண்டும் ரஷியாவுடனே இணைக்க, பல ஆண்டுகளாக போராடி வந்த ரஷ்ய அதிபர் புதின், இந்தாண்டு, எல்லையை மீறி, உக்ரைன் மீது போரே தொடுத்து விட்டார். அவரது பேரிலேயே, உக்ரைனிய முழியில் இருக்கும் பேரான, ‘வுலாதிமிர் செலென்ஸ்கி’, உக்ரைன் அதிபராக இருக்க, தனது நாட்டில் இருக்கும் கடைசி உயிர் வரை அனைவரையும் பாதுகாக்க, நேரடியாக களமிறங்கி ஹீரோவாகப் பார்க்கப்படுகிறார்.
அதுமட்டுமின்றி, உக்ரைன் மீதான போரை தடுக்க, உலக நாடுகள், ரஷ்யா மீது பல வகையான பொருளாதார தடைகளை செலுத்தி வந்த நிலையில், தனித்து விடப்பட்டிருக்கிறது ரஷ்யா. போர் துவங்கிய நேரம், கண்டிப்பாக ரஷ்யா, “ஆள்திரட்டலில்” ஈடுபடாது என அதிபர் புதின் வாக்களித்தாலும், அந்த சிறிய வாக்கைக் கூட காப்பாற்ற முடியாமல் தவித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உண்மையை சொல்ல போனால், புதின் தற்போது பெரும் புதைகுழியில் சிக்கிக் கொண்டார். மற்றும், அவரைக் காக்க அவரது வெற்றியாலும் முடியாது என, உலக போர் மற்றும் அரசியல் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) இயக்குனர் மேக்ஸ் பெர்க்மேன் (Max Bergmann), இது குறித்து, “உக்ரைன் மண்ணை விட்டு வெளியேறுவது தான் புதினுக்கு நல்லது. தான் கண்டிப்பாக வெற்றி அடைய மாட்டோமென தெரிந்தும், சிலர் நகர முடியாமல் சிக்கிக் கொள்வர். அதே அழிவு பாதையில் தான் புதினும் சென்று கொண்டிருக்கிறார்” என கருத்துரைத்துள்ளார்.
உக்ரைனின் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய தாக்குதல்கள் உக்ரைனிய படைகளால் வீணடிக்கப்பட்டதால், புதினுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து, பல ராணுவ உபகரணங்கள் மற்றும் ராணுவ வீரர்களை இழந்து, பொருளாதார ரீதியாகவும் பின்னடைவு பெற்று, தத்தளித்து கொண்டிருக்கிறது ரஷ்யா.
இந்நிலையில், “ஆள்திரட்டலில்” ஈடுபட்டுள்ளது ரஷ்யா. கட்டுப்பாடுகளற்ற போரில் ஈடுபட தயாராகி வரும் ரஷ்ய அதிபர் புதின், ஒன்று மலையை பிளக்கும் வெற்றி பெற வேண்டும், அல்லது, மண்ணை கவ்வ வேண்டும். அவ்வளவு மோசமான நிலை தான் அவருக்கு.
என்ன இந்த “Partial Mobilization”?
கிட்டத்தட்ட “வீட்டிற்கு ஒருவர் ராணுவத்திற்கு” என்ற திட்டம் தான், ஆள்திரட்டல், அல்லது அணிதிரட்டல் என்பார்கள். நெருக்கடியான சூழலில் இருக்கும் புதின், முழு வீச்சில் ஆள்திரட்டலில் ஈடுபடாமல், ஏற்கனவே பாதுகாப்பு துறைகளிலும், ராணுவத்திலும் பணியாற்றி ஓய்வு அல்லது விடை பெற்றவர்களையே போருக்கு அழைத்திருக்கிறார். இதனால், தான் இது “Partial Mobilization” அதாவது பகுதியளவிலான ஆள்திரட்டல் எனப்படுகிறது.
யார் இதில் கலந்து கொள்வர்?
போர்களின் உத்திகளை கற்றுத் தேர்ந்த, ஏற்கனவே ஈடுபட்டவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வகையில், ரஷ்யாவில், சுமார் 2.5 கோடி மக்கள் ராணுவ பயிற்சியாளர்களாகவே பணி புரிந்த நிலையில், அவர்கள் அனைவரும் இதற்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர்.
இதில் என்ன இருக்கிறது?
இது தான் உலக அமைதியையே நிர்ணயிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏன் என்றால், ரஷ்யாவின் படையெடுப்பு, உலகளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ரஷ்யாவின் ஈடுபாடு இருப்பதால், ரஷ்யாவின் தோல்வி, ஆட்சியையே மூழ்கடிக்கும் படியாக்கும் என்றால், அது மிகையாகாது. ஒரு வேளை ரஷ்யா வெற்றி பெற்றாலும், போரெடுப்பு மூலம் இழந்தவற்றை ஈடுகட்ட சுமார் 10 வருடங்களாவது ரஷ்யாவிற்கு ஆகும்.
மேலும், தற்போது வெளியான அதிபரின் அறிக்கையில், “நாங்கள் அணுகுண்டு பற்றி சிந்தனை செய்யவில்லை. ஆனால், தவிர்க்க முடியாத சூழல்களில் எந்த முடிவும் எடுக்கப்படும்” என்ற மறைமுக மிரட்டலும் விடப்பட்ட நிலையில், உலக மக்களுக்கு பெரும் பீதி கிளம்பியுள்ளது. ஒரு வேளை உக்ரைன் மீதான போரின் போது அணு குண்டுகள் பயன்படுத்தப்பட்டால், உலக அமைதி கெடுவதோடு, பல உயிர்களை இழக்கும் நிலை ஏற்படும்.
ரஷ்யாவின் அண்டை நாடான, மூன்றாம் மிகப்பெரிய நாடு சீனா, இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. அணுசக்திகளைப் பயன்படுத்துவதால், யாருக்கும் எந்த ஒரு லாபமும் இருக்காது என்றும், அதனால் அழிவு மட்டுமே வரும் என்றும் கூறும் நிலையில், ரஷ்ய அதிபர், திக்குத் திசை தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பதாகவும், தனது கடைசி ஆயுதமாக அணு சக்தியை பிடித்து, நுணியில் தள்ளாடிக் கொண்டிருப்பதாகவும், உலக தலைவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், அனைவரும் பதற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
--- பூஜா ராமகிருஷ்ணன்