டெண்டர் முறைகேட்டில் இபிஎஸ்-க்கு சிக்கலா?

டெண்டர் முறைகேட்டில் இபிஎஸ்-க்கு சிக்கலா?

டெண்டர் முறைகேடு:

மறைமுக நடைபெறும் ஏலத்தை தான் டெண்டர் என்று குறிப் பிடுவார்கள். அதாவது அரசின் பணி ஒப்பந்தங்களும், ஏலங்களும் இந்த முறையில்தான் நடக்கும். ஒருவர் கேட்கும் தொகை அடுத்தவருக்கு தெரியாது. அப்படி தெரியாமல் இருப்பதாற்காக ஏலம் கேட்பவர்கள் தொகையை எழுதி முத்திரையிட்ட ஒரு கவரினுள் வைத்து அளிக்கவேண்டும் என்பது விதிமுறை. இப்படியாக  நடக்கும் டெண்டரில் எந்த நபரும், தகுதி வாய்ந்த நபர்களை மிரட்டியோ, இல்லை வேறு விதத்திலோ ஒப்பந்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது. அப்படித் தடுத்தால், அவர்கள் மேல் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்.

ஆர்.எஸ். பாரதியின் குற்றச்சாட்டு:

நெடுங்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சலை சீரமைப்புப் பணிக்கான டெண்டரில், தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது,  சுமார் 4800  கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ் பாரதி குற்றம் சாட்டியிருந்தார்.

218 பக்க மனு தாக்கல்:

ஈ. பி.எஸ் க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதலாக  இன்று 218 பக்கம் கொண்ட மனுவை தாக்கல் செய்திருக்கிறார் திமுகவை சேர்ந்த ஆர். எஸ்.பாரதி. அந்த 218 பக்க மனுவில், அப்போதைய ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி , தன்னுடைய முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தியாக குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அமைப்புகளை செயல்பட விடாமல் தடுத்துள்ளார். இதையெல்லாம் செய்ததற்கு காரணம் இந்த வழக்கில் தான் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தான். அதுமட்டுமில்லாமல் டெண்டர் முறைக்கேடு தொடர்பாக தொடர்ந்த வழக்கில் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பிறகு தான் சி. பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டது என்றும் அந்த 218 பக்க மனுவில் குறிப் பிட்டிருந்தார். அத்துடன் வழக்கை ரத்து செய்யக்கோரி ஈ. பி.எஸ் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்யவும் உச்ச நீதிமன்றத்திற்கு முறையீடு செய்துள்ளார்.

டெண்டர் முறைகேட்டில் இ பிஎஸ்-க்கு சிக்கலா?:

டெண்டர் முறைக்கேடு வழக்கில் உலக வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிராக டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதலாக மனு ஒன்றை அனுப் பியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி. ஏற்கனவே கொடநாடு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சிக்கி தவித்து வரும் ஈ. பி.எஸ், தற்போது டெண்டர் முறைகேட்டிலும் சிக்கியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் மனு அனுப் பியுள்ள ஆர்.எஸ்.பாரதி  அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை குறிப் பிட்டுள்ளார். இதனால் இந்த டெண்டர் முறைகேடு வழக்கு ஈ. பி.எஸ்க்கு சிக்கலாக அமையுமா? ஆர்.எஸ்.பாரதியின் மனுவை அடுத்து ஈ. பி.எஸின் அடுத்தகட்ட  நகர்வு என்னவாக இருக்கும்? என்பதை உற்று நோக்குகிறார்கள் அரசியல் வட்டாரங்கள்.