இந்தியா-வங்காளதேச நட்பு பைப்லைன் விரைவில் திறப்பு....முழு விவரம் சுருக்கமாக!!!

இந்தியா-வங்காளதேச நட்பு பைப்லைன் விரைவில் திறப்பு....முழு விவரம் சுருக்கமாக!!!

வங்காளதேசத்தில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியை அடுத்து, தொடங்கப்பட்ட இந்த திட்டம் நீண்ட கால வணிக வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-வங்காளதேச நட்பு பைப்லைன்:
 
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா-வங்காளதேச நட்புக் குழாய் திட்டத்தின் மூலம் 2023 -க்குள் இந்தியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

நவம்பர் 20, 2022 அன்று, அஸ்ஸாம் சட்டப் பேரவையின் சபாநாயகர் பிஸ்வஜித் டைமரியுடன் டாக்காவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ கணபபன் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது 2023ல் இந்த திட்டம்  திறக்கப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பங்களாதேஷ் நட்பு பைப்லைன் பின்னணி:

கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் செப்டம்பர் 18, 2018 அன்று , இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை குறைப்பதற்காக திட்டமிட்டனர்.  

இந்தியா-வங்காளதேச நட்புக் குழாய் என்றால் என்ன?:
 
130-கிமீ இந்தியா-வங்காளதேச நட்பு குழாய் திட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி மார்க்கெட்டிங் டெர்மினலில் இருந்து எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது .

தற்போது, ​​வங்காளதேசத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் எண்ணெய் முதலில் சட்டோகிராம் மாவட்டத்தில் உள்ள நாட்டின் முக்கிய துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டு, பின்னர் டேங்கர்கள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.  இது கால விரயமானது மற்றும் அதிக செலவுடையது.

130 கி.மீ எண்ணெய்க் குழாயின் திறன் ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் எனவும்
டாக்கா-டெல்லி ஒப்பந்தத்தின்படி , முதல் கட்டமாக குழாய் வழியாக 15 ஆண்டுகளுக்கு எரிபொருள் எண்ணெய் கொண்டு செல்லப்படும் எனவும் நாடுகளின் ஒருமித்த கருத்துடன் கால நீட்டிப்பு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம்:

இந்தியா-வங்காளதேசத்தை இணைக்கும் விதமாக பெட்ரோலிய இணைப்பு குழாய் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

நல்லுறவு:

வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து, இந்த திட்டம் நீண்ட கால வர்த்தக வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப புரிதலுடன் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.  இது இரு தெற்காசிய நாடுகளுக்கிடையிலான நல்லுறவுக்கு சான்றாகும். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உலகின் மிகப்பெரிய மிதக்கும் நூலகக் கப்பல்...