ஆண்மை இருந்தால் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்..!

நயினார் நாகேந்திரனின் பேச்சால் அதிமுக-பாஜக இடையே பற்றி எரியும் தீ..!

ஆண்மை இருந்தால் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்..!

ஆளுங்கட்சியை சீண்டுவதற்கு பதிலாக கூட்டணி கட்சியையே சீண்டி உள்ளுக்குள்ளேயே பகையை வளர்த்துவிட்டார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன். கடந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. ஒருபுறம் நீட் தேர்வினை எதிர்கொள்ள முடியாமலும், அந்த தேர்வில் மதிப்பெண்கள் பெற முடியாமலும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மறுபுறம் ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்போது புதிதாக மதம் மாற வேண்டும் இல்லையேல் படிக்க விடமாட்டோம் என பள்ளி நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொள்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதியில் தங்கி பயின்று வந்த 12-ம் வகுப்பு மாணவியை கிறிஸ்துவ மதத்திற்கு மாறும் மாறி வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியின் கழிவறைகளை சுத்தம் செய்யக் கோரி நெருக்கடி கொடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு பலரும் பலவிதமான கண்டனங்களை பதிவு செய்து வரும் சூழலில், ஆளும் கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் இந்த விஷயம் குறித்து எவ்வித அறிக்கைகளும் விடவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விஷயத்தை அரசியல் ஆக்காதீர்கள் என ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இந்த சம்பவத்திற்கு எதிராக பாஜகவினர் மட்டும் ஆங்காங்கே குரல் கொடுத்து வருகின்றனர். மாணவியின் தற்கொலைக்கு நீதி வேண்டி, பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். 

இந்தப் போராட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கு பதிலாக, கூட்டணி கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அச்சமின்றி கேள்வி எழுப்பி வருகிறார். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தார். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கட்சியின் மூத்த எம்எல்ஏ இப்படி பேசுவது அதிமுக தலைமையை கடுமையாக சீண்டி உள்ளது.
தலைமையில் இருந்து நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு எவ்வித கண்டனமும் வரவில்லை என்றாலும், நிர்வாகிகள் பலர் அவருக்கு எதிராக புகார் கொடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தயவால் தான் பாஜக 4 எம்.எல்.ஏக்களை பெற்றது. அப்படியிருக்க உண்மையில் ஆண்மை இருந்தால் பாஜகவினர் தனித்து போட்டியிடட்டும். நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் தனித்து போட்டியிட்டு முடிந்தால் சட்டசபைக்கு செல்லட்டும் என அதிமுகவினர் பலர் சவால் விடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டாக புகார் அளித்துள்ளனர்.

சென்னை K5 பெரவள்ளூர் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளரிடம் கொளத்தூர் அதிமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகாரில், அதிமுக நிர்வாகிகளை பொது இடத்தில் தவறாக பேசிவிட்டார், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இவர்களின் புகாரை தொடர்ந்து டெல்லி வரை சென்றுவிட்டது இந்த விவகாரம். டெல்லி தலைமையிடம் இருந்து நயினாருக்கு ரைடு விழுந்ததா என்ன என்பது தெரியவில்லை. தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளார் நயினார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது, அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துகள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே நோக்கம் என கூறியுள்ளார் நயினார். ஏற்கனவே உட்கட்சி விவகாரங்களில் பாஜகவினர் தலையிடுவதாக அதிமுக தலைமை கோவத்தில் இருந்து வரும் சூழலில், இப்படி கூட்டணி கட்சியினரே, அவர்களை பொது இடத்தில் கேவலமாக விமர்சனம் செய்திருப்பதை, மேலும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது அதிமுக தலைமைக்கு. நயினாரின் இந்த பேச்சு அதிமுக தலைமை என்ன சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. ஏற்கனவே இருக்குற பிரச்னை பத்தாதுன்னு..இவன் வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பன்ன்றாண்டா...