இனி இதை செய்தால் மட்டும் தான் விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000....நீங்கள் செய்துவிட்டீர்களா!!!

இனி இதை செய்தால் மட்டும் தான் விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000....நீங்கள் செய்துவிட்டீர்களா!!!

நகரங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  சுகாதாரம், ஓய்வூதியம், ரேஷன், வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற பல வகையான நன்மை பயக்கும் நலத்திட்டங்கள் மாநில மற்றும் மத்திய அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன. 

சம்மன் நிதி யோஜனா:

மத்திய அரசு விவசாயிகளுக்காக பிரதம அமைச்சர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தவணையில் 2 ஆயிரம் ரூபாய் அதாவது ஆண்டுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.  இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 13வது தவணைக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.  

ஆனால் இந்த தவணையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் இரண்டு விஷயங்களைச் செய்வது மிக அவசியம். ஏனென்றால், இந்த இரண்டு விஷயங்களையும் செய்யவில்லை என்றால், உங்கள் தவணைப் பணம் சிக்கியிருக்கலாம். எனவே அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

13வது தவணை எப்போது வரலாம்?:

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வந்துள்ளன, இப்போது அனைவரும் 13வது தவணைக்காக காத்திருக்கிறார்கள்.  மத்திய அரசால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளை பார்க்கும் போது, இந்த தவணை டிசம்பர் மாத இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளம்பரம்

முக்கிய இரண்டு பணிகள்:

பணி 1:

நீங்கள் பெறும் 13 வது தவணை முறையாக வர விரும்பினால், இதற்காக நீங்கள் உடனடியாக e-KYC செய்ய வேண்டும்.  இதை ஒவ்வொரு பயனாளியும் செய்வது கட்டாயம்.

PM Kisan Portal இன் படி, அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in ஐப் பார்வையிடுவதன் மூலம் OTP அடிப்படையிலான e-KYC ஐப் பெறலாம்.  இது தவிர, உங்கள் அருகிலுள்ள CSC மையத்திலிருந்தும் e-KYC செய்து கொள்ளலாம்.

பணி 2:

பிஎம் கிசான் யோஜனாவுடன் தொடர்புடைய ஒவ்வொரு பயனாளியும் நிலச் சரிபார்ப்பைப் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  நீங்கள் இதுவரை இதைச் செய்யவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்யுங்கள் இல்லையெனில் தவணை பெறுவது சிக்கலாகிவிடும்.  மோசடி மற்றும் தவறான வழிகளில் மக்கள் பலன்களைப் பெறுவதைத் தடுக்க அரசாங்கம் இதைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா...இதோ சில எளிய வழிமுறைகள்!!!