வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட என்னையும் சேர்த்து 16 பெண்களுக்கு நியாயம் வாங்கிக்கொடுங்கள் மேடம்... கனிமொழிக்கு பாடகி சின்மயி கோரிக்கை!!

வைரமுத்துவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் என்னுடன் சேர்த்து மேலும் 16 பெண்களுக்கும் நியாயம் வாங்கிக்கொடுங்கள் கனிமொழி மேடம் என்று பாடகி சின்மயி கோரிக்கை விடுத்துள்ளார்.

வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட என்னையும் சேர்த்து 16 பெண்களுக்கு நியாயம் வாங்கிக்கொடுங்கள் மேடம்... கனிமொழிக்கு பாடகி சின்மயி கோரிக்கை!!

பத்மஷேசாத்ரி பள்ளி மாணவிகள் மீது காட்டும் அக்கறையை வைரமுத்துவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் என்னுடன் சேர்த்து மேலும் 16 பெண்களுக்கும் நியாயம் வாங்கிக்கொடுங்கள் கனிமொழி மேடம் என்று பாடகி சின்மயி கோரிக்கை விடுத்துள்ளார்.

கனிமொழி பத்மஷேசாத்ரி பள்ளி தொடர்பாக பதிவிட்டிருந்த ட்வீட்டை டேக் செய்துள்ள சின்மயி, உண்மையிலேயே நீங்கள் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னை கேகே நகரில் உள்ள ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பத்திற்கு சொந்தமான பத்மஷேசாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபலன் மீது மாணவி ஒருவர் ட்விட்டரில் பாலியல் புகார் கூறியிருந்தார். ஆன்லைன் வகுப்பிற்கு ராஜகோபாலன் வெறும் துண்டை மட்டுமே கட்டிக் கொண்டு வருவதாகவும், லேட் நைட்டில் அசிங்கமாகவும், ஆபாச மெஸேஜ் வாட்ஸ்ஆப்பில் அனுப்புவதாகவும் ஸ்க்ரீன் ஷாட்டுகளோடு கூறியதை  புகாரை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியுலகிற்கு பகிர்ந்தார். சின்மயி வெளியிட்டதிலிருந்து நாடுமுழுவதும் வெடித்தது.

இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி ட்விட்டரில் பதிவிட்ட பிறகு தான் மேலும் பல #PSBB  பள்ளி மாணவிகள் தங்களுக்கு அங்கு ராஜகோபாலன் மட்டும் அல்லாமல் வேறு பல ஆசிரியர்களால் ஏற்பட்ட பாலியல் வக்கிரங்களை பட்டியலிட்டனர். இதுகுறித்து கனிமொழி எம்பி,  பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முறையான விசாரணை தேவை என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து கனிமொழிக்கு கோரிக்கை விடுத்துள்ள பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில்...  "நானும் என்னுடன் மேலும் 16 பேர்  பாதிக்கப்பட்ட வைரமுத்து மீதான பாலியல் வண்புணரச்சி விவகாரத்திலும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நம்புகிறேன். இடைக்கால தடை உத்தரவு இருந்தும் ராதாரவி மற்றும் அவரது ஆதரவளர்கல் என்னை பணி செய்ய விடாமல் தடுகின்றனர். எனது பிரச்சனையை பேச எனக்கு தகுதி இல்லை என்பதை என்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று கனிமொழி எம்பிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.