இங்க இருந்த கால்வாயை காணோம்... கால்வாய்க்குள் கட்டப்பட்ட மருத்துவமனை.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்....

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கால்வாயை ஆக்கிரமித்து மருத்துவமனை கட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சர்வேயர் காலனி. இங்கே அழகர் கோவில் செல்லும் முக்கிய சாலையில் தேவதாஸ் என்ற மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை அதே பகுதியில் பெரிய அளவில் பாயும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒட்டுமொத்த மருத்துவமனையும் கால்வாய்க்குள்தான் இருக்கிறது. மருத்துவமனைக்கு போட்டியாக கால்வாயின் மறுகரையில் திருமண மண்டபம் ஒன்று கால்வாய்க்குள் கட்டப்பட்டு உள்ளது. சிறு குழந்தைகளே பார்த்தால் தெரியும் அளவிற்கு இவ்வளவு வெளிப்படையாக  ஒரு கால்வாயை மறைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகவுள்ளது.