”ஒரு நாளாச்சும் தனக்காக வாழ வேண்டும்” - மஹான் திரைவிமர்சனம் 

”ஒரு நாளாச்சும் தனக்காக வாழ வேண்டும்” - மஹான் திரைவிமர்சனம் 

தமிழ் சினிமாவில் மற்றுமொரு ரா"வாண  ரவுடிசம்  படம்,  செவன் கிரீன்ஸ் ஸ்டுடியோஸ்  தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிப்ரவரி 2ம்  தேதி ஓடிடி தளத்தில்  வெளிவந்த மஹான் திரைப்படம் தற்போது மக்களிடத்தில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல கதை களமும் ஸ்டைலிஷான மேக்கிங் மூலமும் படத்தை பார்க்க வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படம் அவரின் இயல்பான பாணியில் வடிவமைத்து இருந்தாலும் விக்ரம், சிம்ஹா மற்றும் துருவ் வின்  நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. கார்த்திக் சுப்புராஜின் படங்களான பேட்ட , ஜிகிர்தன்டா மற்றும் ஜகமே தந்திரம் ஆகியவற்றில் இருந்த அதே  பார்முலா தான் இதிலும் உள்ளது . 

காந்திய வழி கொள்கைகளையும் நாடு சுதந்திரத்திற்கு பின் மது ஒழிப்பிற்காக போராடிய  பாரம்பரிய காந்தியவழி குடும்பத்தில் பிறந்தவர் விக்ரம். காந்தி மீது உள்ள பற்றால் அவர் அப்பா  விக்ரமிற்கு மஹான் காந்தி என பெயர் வைக்கின்றார். சிறு வயதில் இருந்தே அகிம்சை , மது ஒழிப்பு  என்ற கொள்கைகளை  திணிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார் விக்ரம். பள்ளியில் காமெர்ஸ் வாத்தியாராக பணியாற்றும் விக்ரம் நாற்பது வருஷமா தனக்கு பிடிக்காத வாழ்க்கையை தன்னோட குடும்பத்துக்காக வாழ்ந்து வருகிறார் . ஒரு நாளாச்சு தனக்காக வாழ வேண்டுமென முடிவெடுக்கிறார். இப்படி இருக்க அவரின் சிறு வயது நண்பன்  மதுக்கடை உரிமையாளரான சிம்ஹா (சத்யன் ) மற்றும் அவரின் மகன் சனந்த் (ராக்கி) யை எதிர்பார்க்காமல் சந்திக்கிறார்  அந்த ஒரு நாள்  அவர் நெனச்சது போலவே அவருக்காக வாழுறாரு , அந்த ஒரு நாள் அவரின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. அவரோட குடும்பமே அவரை நிற்கதியாய்  நடுரோட்ல விட்டு போயிடுறாங்க.  

பின்பு அவரின் நண்பனோட பார்ட்னராக  சேர்ந்து ஒரு சாராய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி மாஸ் ஆனா காங்ஸ்டர்  ஆகுறார். இப்படியே நல்லா போயிட்டு இருந்த இவங்க வாழ்க்கைல இவங்கள எதிர்க்கும்  போலீஸ் ஆஃபீசரா துருவ் விக்ரம்  வராரு, அப்பாவை விரட்டும் மகன்... ! இறுதியில் என்னாச்சு என்பதுதான் படத்தோட மீதி கதை. 

இந்த படத்துல விக்ரமோட கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் படத்துக்கு பலம் சேர்க்கிறது, மற்றும் விக்ரம் நடிப்பை பற்றி சொல்லவா வேணும், அவரோட நடிப்புக்கு சரியான தீணி  போட்டு இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் முழுவதும் காலி ஆட்டம் ஆடும் விக்ரம் அப்பாவை கலங்கடிக்கும் மகன் துருவ்  என படம்   பார்க்க நல்ல அக்சன் திரில்லராக இருக்குதுனு தான் சொல்லணும். அதுமட்டுமல்லாம் சிம்ஹா வின் நடிப்பும் நுணுக்கமான  உடல்பாணியும் கார்த்திக் சுப்புராஜின் படத்துக்கு மட்டும் எங்க இருந்து வருதுன்னு தெரியல. இந்த படத்துல பெரிய   பாசிடிவிவாக கதாபாத்திர வடிவமைப்பும் நடிகர்களின் நடிப்பும் இருக்கிறது.

படத்தில் விக்ரமோடு போட்டி போடும் துருவ்..., கண்ணை யாரிடம் திருப்புவது என  பார்ப்போரை சிலிர்க்க வைக்கும் அளவிற்கு இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். அப்பாவுக்கு தப்பாம பொறந்து இருக்காருன்னு பலரும் பாராட்டும் காட்சியும் உள்ளது. சில இடங்களில் ஓவர் ஆக்ட்டிங் செய்வது போன்ற  காட்சிகளும் இடம்பெற்றிறுக்கு .   சில காட்சிகள் எளிதாக யூகிக்கிறபடியாக இருப்பதும் அப்பா மகன் சென்டிமென்ஸ் பார்வையாளர்களுக்கு கனெக்ட்  ஆகாதது ஒரு ட்ரா பேக்கா இருக்கு.

என்னதான் இயக்குனர் இந்த மாதிரி கேங்ஸ்டர் படத்துக்கு பேர் போனவர் என்றாலும் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஷ் கிருஷ்ணா புது வித அங்கிள்ஸ் கேமரா மூவ்மென்ட்ஸ்  மூலம் மிரட்டியுள்ளார். படத்திற்கு மற்றொரு தூணாக கலை இயக்குனர் மோகன் அசத்தியிருக்கிறார்  . இன்னும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சில இடங்களில்  மாஸ் ஆகவும் சில இடங்களில் குறைவாகவும் இருக்கிறது. 

படத்துல ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் என தெறிக்கவிட்டிருந்தாலும் கிளைமாக்ஸ் கார்த்திக் சுப்புராஜின் மற்ற பட பாணியிலே இருப்பது  பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்த மாதிரி கிளைமாக்ஸ் அமையல்னுதா சொல்லணும்.  படத்தின் முடிவில் மகான் பார்ட் 2க்கு  அடித்தளம் போட்டு முடித்து இருப்பது இன்னும் சிறப்பு. மொத்தத்தில் ஒரு நல்ல ஆக்‌ஷன்  திரில்லராக படம் இணையத்தில் வலம் வருகிறது.