மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி..! பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் குழப்பம்..!

சென்னை ஆளுநர் மாளிகையின் நடைபெற்ற சம்பவம் ஒன்று பல்வேறு விவாதங்கங்களை எழுப்பியுள்ளது.
ஆளுநர் ரவி:
சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம், திருக்குறள் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். அவருடைய பேச்சுக்கள் பல விவாதங்களை எழுப்புவதோடு விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
நதி - கடவுள்:
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு அளுநர் ஆர்.என்.ரவி, நதிகளை வழிபடுவது இந்த பாரதம் முழுக்க இருக்கும் வழக்கம். நாடு முழுக்க இந்த பழக்கம் உள்ளது. சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல. இது பாரதத்தில் பழங்காலமாக இருக்கும் பாரம்பரியம். நண்பர்களே தமிழ் மிகவும் பழமையான மொழி எனக் கூறிப்பிட்டதோடு,
தமிழ்:
தமிழ் அழகான மொழி. தமிழ் மிகவும் சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். ஒருநாள் அவர்களை போல தமிழ் பேச வேண்டும். அவர்களை போல உச்சரிக்க வேண்டும். நாம் பாலாற்றை வணங்க இங்கே வந்து இருக்கிறோம். இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது இங்கும் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம், என்று ஆளுநர் ரவி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: கணவரை 10 பாகங்களாக்கி பிரிட்ஜில் வைத்த மனைவி..! தலைநகரை அதிர வைத்த சம்பவம்
விமர்சனம்:
அவரின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்திய என்பது மதசார்பற்ற நாடு. ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி ஏற்று இருக்கும் ஆளுநர் ஒருவர் மத ரீதியாக பேச கூடாது. மத ரீதியாக கருத்துக்களை வைக்க கூடாது என விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், ஆளுநர் ஆர். என் ரவி தொடர்ந்து மதம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார்.
பிறந்தநாள் விழா:
சென்னை ஆளுநர் மாளிகையில் மகாகவி பரதியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில் என்ன சர்ச்சை எனக் கேட்கலாம், ஆனால் பாரதியாரின் பிறந்தநாள் டிசம்பர் 11. ஆளுநர் மாளிகையில் கொண்டாட்டப்பட்டதோ நவம்பர் 27 ஆம் தேதி. அதாவது மகாகவி பாரதியாரின் கார்த்திகை மாதம் மூல நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஆளுநர்.
ட்விட்டர் பதிவு:
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் சமூகவலைதள பக்கத்தில், மகாகவி பாரதியாரின் கார்த்திகை மாதம் மூல நட்சத்திர பிறந்தநாளான இன்று அவரது திருஉருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாரத மாதாவின் மகத்தான மகன் நம்மை என்றும் ஊக்குவிப்பான். , என்று குறிப்பிடபட்டுள்ளது.
விவாதங்கள்:
இந்துக்களில் சிலர் இப்படி நட்சத்திர நாளை வைத்து பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். இதுவரை இப்படி எந்த ஆளுநரும் செய்தது இல்லை. அரசியல் தலைவர்களும் செய்தது இல்லை. தீவிர இந்துத்துவா தலைவர்களும் இப்படி கொண்டாடியது இல்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் ஆளுநர் ரவி. இது தான் தற்போது விமர்சங்களை சந்தித்து வருகிறது.