பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் கட்டு கட்டாக பணமாம்.. சோதனை நிறைவில் அதிகாரிகள் தகவல்..!

தயாரிப்பாளர்கள் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையும் நிறைவு..!

பைனான்சியர் அன்புச் செழியன் வீட்டில் கட்டு கட்டாக பணமாம்.. சோதனை நிறைவில் அதிகாரிகள் தகவல்..!

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனை நிறைவு பெற்றுள்ளது. 

வருமான வரித்துறை சோதனை: தமிழ்த் திரைப்பட துறையில் பல்வேறு படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவர் அன்புச் செழியன். இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 3 நாட்களாக அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. குறிப்பாக சென்னை காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச் செழியன் வீட்டிலும், திருவல்லிக்கேனி, தியாகராயர் நகர் ஆகிய இடங்களிலும், கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திலும், மதுரையில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 

சோதனை நிறைவு: இதேபோல் அவருடன் இணைந்து படம் தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு,  எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா என கிட்டதட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மூன்று நாட்களாக நீடித்த இந்த சோதனையானது இன்று காலை நிறைவு பெற்றுள்ளது. 

கணக்கில் வராத ரொக்கம்: இதில் அன்புச்செழியனின் மதுரை வீட்டில் இருந்து  கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டு மதுரை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தொடர்பான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.