நான் ஏன் நீங்க சொல்றத கேக்கணும்?- நிதியமைச்சர் கொந்தளிப்பின் பின்னணி என்ன?

சமீபத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நிதியமைச்சர் பி தியாகராஜன், தான் தனது வேலையை சரியாக செய்து வருவதாகவும், தன்னை கேள்வி கேட்கும் அளவில் தகுதியானவர்கள் யார் இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

நான் ஏன் நீங்க சொல்றத கேக்கணும்?- நிதியமைச்சர் கொந்தளிப்பின் பின்னணி என்ன?

சில கட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல பேரை பெரும் நோக்கில், குறுக்கு வழியாக இலவசங்கள் வழங்குவதைத் தேர்ந்தெடுக்கின்றனர். இலவசங்கள் கொடுப்பதால் மட்டும் அது நல்லாட்சி ஆகி விடாது என, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பேசியுள்ளார். மேலும், இலவச திட்டங்களால், அதிக செலவாகிறது என, மத்திய அரசு, தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.

பாஜக வழக்கு பதிவு!

தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில், பாஜக தரப்பு வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த இப்பொதுநலன் வழக்கில், இலவசங்கள் வழங்குவதன் சாதகங்களையும், பாதகங்களையும் ஆய்வு செய்ய, நிபுணர் குழு ஒன்றை அமைக்கலாம் எனவும், அதில், மத்திய அரசு, மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகள், நிதி ஆணையம், நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் இடம்பெறலாம் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய அமர்வு தெரிவித்தது.

FinMin PTR to script bulk of TN Budget speech- The New Indian Express

இடையீட்டு மனு:

இந்நிலையில், ‘அடித்தட்டு மக்கள் மக்கள் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக நீதியைக் காக்கும் வித்ததில் தான் இலவசங்கள் வழங்கப்படுகின்றன’ என உச்ச நீதிமன்றத்தில், திமுக சார்பாக, ஆர்.எஸ். பாரதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அஃபிடவிட் பற்றி தெரியாது!

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருபதாகத் தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஏன் என்றால், அதன் பிரமாணபத்திரம் (அஃபிடவிட்) தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், செய்திகளில் படித்து தான் தெரிந்துக் கொண்டதாகவும் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், அந்த அஃபிடவிட்டில், தேர்தல் ஆணையம் சுதந்திரமான  அரசியல் சாசன அமைப்பு என்பதால் நிபுணர் குழுவில் பங்கேற்க விரும்பவில்லை எனவும்,  தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் கருத்துக்கள் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரம் தரும் இலவசங்கள்:

ஆனால், தற்போதைய சூழலில், இலவசங்களால் தான் பலரது வாழ்வாதாரம் நிலைத்திருக்கிறது என மாநில அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதங்கள் மூலம், ‘இது முக்கியமான பிரச்சனை என்பதால், அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும். இந்த விவகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்’ என கடந்த 11ம் தேதி தெரிவித்தது. பின், இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும்,  இலவசங்களை தடுக்க சட்டம் இயற்றவும் உத்தரவிட முடியாது என கூறி,  வழக்கை நேற்றுக்கு ஒத்தி வைத்தது.

PTR says Tamil Nadu regularly targeted in Lok Sabha as it fares better than  Union govt | The News Minute

நீதிமன்றம் தலையிட முடியாது!

இந்த வழக்கில் திமுக சார்பில், வழக்கறிஞர் திமுக மாநிலனக்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான, பி. வில்சன் மற்றும் வழக்கறிஞர் நெடுமாறன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதில், ‘சமூக நீதி பற்றி அரசியலமைப்பு சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தான் தேர்தல் நேரம் இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இலவசங்களில், இலவச மின்சாரம் மூலம், ஏழை மாணவர்களின் கல்வி மேம்படுத்தப்படுகிறது. இது போன்ற இலவசங்கள் வழங்குவது அரசு கொள்கைகள் சார்ந்தது என்பதால், நீதிமன்றம் இதற்குள் தலையிட முடியாது.” என வாதம் முன்வைக்கப்பட்டது.

பணக்காரர்களைப் பணக்காரராக்கும் சலுகைகள் தேவையா?

மேலும், பல முக்கிய பிரமுகர்கள் கடன் வாங்குவதைப் பற்றியெல்லாம் பேசாமல் விட்டு, ஏழைகளுக்கு வழங்கும் இலவசங்கள் மீது கை வைப்பது ஏன் என்றும், திமுக சார்பு வழக்கறிஞர் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார். இது குறித்து பேசிய போது, “பெரிய தொழிலதிபர்கள் வாங்கிய பெரும் வங்கிக்கடன்கள் மொத்தமாக ரத்து செய்யப்படுவது ஒரு வகையில் இலவசம் தானே? அதே போல, வசதியானவர்களுக்கு சலுகைகள் வழங்குவதெல்லாம் எப்படி சமூக நீதி நிலைப்படுகிறது?” என்று கேட்டார்.

முதலாளித்துவ நாடாக மாற்றும் முயற்சி!

பின், இலவசங்கள் குறித்து அராய குழு அமைப்பதை திமுக எதிர்ப்பதாக கூறி, ரிட் மனுதாரர் இந்தியாவை சமதர்மவாத நாடில் இருந்து முதலாளித்துவ நாடாக மாற்றி வருகிறது என்று, பி. வில்சன் வாதிட்டார். மேலும், மாநிலஙளின் கொள்கைகளின் வழிகாட்டும் கோட்பாடுகளை விரக்தி அடைய செய்வதாகவும் அவர் வைத்த வாதங்களின் அடிப்படையில், இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வு, வரும் திங்கட்கிழமை, அதாவது ஆகஸ்ட் 22ம் தேதிக்கு, அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்க, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

DMK goes traditional way, nominates lawyer, unionist to Rajya Sabha

நீதித்துறை அமைச்சர் ஆதங்கம்!

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்., சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் வாதத்தில் கலந்து கொண்டார். அப்போது, தனக்கு மற்ற வேலைகள் இருப்பதால், சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என கூறிய நிலையில், இந்த வழக்கு தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த போது, தனது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் சரி என்று கேள்வி கேட்டார். மேலும், பாஜக தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, தான் தனது வேலையை மிக சிறப்பாக செய்வதால் தான், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளதாகவும், தன் வேலைகளால், மக்கள் திருபதி அடைந்து மேம்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

என்ன தகுதி இருக்கிறது?

மேலும், பேசிய அவர், “ஒன்று அடிப்படை அரசியலமைப்பு தெரிந்திருந்தால் நீங்கள் (பாஜக) சொல்வது கேட்கலாம். அல்லது, இந்த துறையில் நிபுணராகவோ இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் இரட்டை பி.எச்.டி பட்டமோ, அலது நோபல் பரிசோ பெற்றிருந்தால், எங்களை விட உங்களுக்கு அதிக அறிவு இருக்கிறது எனறு அவர்கள் (பாஜக) கூறுவதை ஒப்புக்கொள்ளலாம். அதுவும் இல்லையா, இது வரை தங்கள் ஆட்சியில், பொருளாதாரத்தை சிறந்தளவில் அதிகரித்திருந்தாலோ, அல்லது கடன்களைக் குறைத்திருந்தாலோ, இல்லையென்றால், தனி நபர் வருமானத்தையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிப்பது போன்ற செயல்கள் மூலம், உங்கள் ஆட்சி செயல்திறனை நிரூபித்திருந்தாலோ, நீங்கள் சொல்வதற்கு நாங்கள் கட்டுப்படலாம். ஆனால், இப்படி தான் எதுவுமே இல்லையே!” என்று கூறினார்.

கடவுள் வாக்கா என்ன?

தொடர்ந்து பேசிய அவர், “இப்படி எதுவுமே இல்லாத ஒருவரது வாக்குகளைக் கடவுள் வாக்காக நான் ஏன் பார்க்க வேண்டும். நான் கடவுளை நம்புகிறவன். நான் எந்த மனிதனையும் கடவுளாக பார்க்க மறுக்கிறேன். பின் ஏன் நான் மற்றொருவரது பார்வைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்?” என்று ஆதங்கததி வெளிப்படுத்தும் விதமாக கேள்வி எழுப்பினார்.

Tight contest in TN, but with edge to DMK' - Rediff.com India News

எனக்கு உரிமை இருக்கிறது!!!

இதனைத் தொடர்ந்து, தனது மாநிலத்தேவைகளுக்கு, முடிவெடுக்கும் உரிமை தனக்கு வழங்கப்பட்டதாகக் ஊறிய அவர், “தேர்தல் மற்றும் எனது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எனக்கு சில பொருப்புகளைக் கொடுர்த்திருக்கிறார். அதன் மூலம் எனக்கு சில உரிமைகள் உண்டு. ஒன்றிய அரசை விட பல மடங்கு நாங்கள் நன்றாக உழைக்கிறோம். நாங்கள் பல மடங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மேலும் இதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சி முடியும் வரை செய்வோம். ஒன்றிய அரசின் கஜானாவிற்கு நாங்கள் தான் அதிகமாக சொத்து சேர்க்கிறோம். இப்படி இலவசங்கள் மூலம் 1 ரூபாய் செலவு செய்யப்பட்டாலும், 30-33 காசுகள் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்? இப்போது கூறுங்கள்! நான் ஏன் அவர்கள் குறுவதைக் கேட்க வேண்டும்?” என்று கொந்தளித்தார்.

மேலும், அவர் அடுக்கடுக்காக மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டார்!

1. அடிப்படை அரசியலமைப்பு இருக்கிறதா? இல்லை!

2. பொருளாதார நிபுணரா? இல்லை!

3. நோபல் பரிசு இருக்கிறதா? இல்லை!

4. குறைந்தது நல்ல அரசியல் செயல்திறன் நிரூபிக்கப்பட்டதா? அதுவும் இல்லை!

பிறகு என்ன அடிப்படையில், இவர்களது உத்தரவுகளை கடவுள் வாக்கு போல மதிக்க வேண்டும்? என்று பேசிவிட்டு, விவாதத்தை விட்டு வெளியேறினார்.

இந்த பேச்சு, பலராலும் ஆதரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இர்ந்தாலும், மத்திய அரசு, மாநில அரசு, எதிர்கட்சி, ஆளுங்கட்சி என பலதரப்பினரிடையே பெரும் விவாதததிக் கிளப்பியதோடு, ஒரு சில பிரிவினருக்கு இடையே மோதலையும் கிளப்பியுள்ளது.