Affidavit ..! நேரம் பார்த்து காய் நகர்த்திய ஈபிஎஸ்..! கட்சியை கைப்பற்ற அனைத்தும் ரெடி..!

Affidavit ..! நேரம் பார்த்து காய் நகர்த்திய ஈபிஎஸ்..! கட்சியை கைப்பற்ற அனைத்தும் ரெடி..!

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள போது, தற்போது இருக்கும் பதவியையும், வரும் தேர்தலில் அதை தக்கவைத்து கொள்ளவும் நேரம் பார்த்து காய் நகர்த்தி இருக்கிறார் அதிமுக இடைகாலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஜூலை 11 பொதுக்குழு:

ஜூலை 11ம் தேதி நடைப்பெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுக்குழு உறுப்பினர்கள்:

ஜூலை 11 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லை, ஈபிஎஸ் இன் உறவினர்கள், பொய் பொதுக்குழு உறுப்பினர்களும் இருந்ததாக ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது. நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து அதுவும் ஒரு வாதமாக வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: கமிஷன், கலெக்சன், கரப்ஷன்..! அமிதாஷாவிடம் ஈபிஎஸ் பேசியது என்ன?

ஈபிஎஸ் வீயூகம்:

அதிமுக வழக்கின் தீர்ப்புகள் நீதிமன்றத்தில் மாறி மாறி வந்துகொண்டு இருக்கும் நிலையில், தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஈபிஎஸ். அதன் ஒரு பகுதியாகவே டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Affidavit :

பொதுக்குழு உறுப்பினர்கள் குறித்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து சந்தேகம் தெரிவித்து வரும் சூழல், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரை சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும், 2500 க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit எனப்படும் உறுதிமொழி கடிதத்தை எடப்பாடி பழனிசாமி  தரப்பு பெற தொடங்கியுள்ளது. 

கூடுதல் ஆதாரம்:

அவ்வாறு பெறப்படும் கடிதங்களை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது கூடுதல் ஆதாரங்களாக சமர்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது ஈபிஎஸ் தரப்பு. மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தல் விரைவில் நடைப்பெற உள்ள நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தேர்தலை நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்.