தமிழ்நாட்டிலும் அமலாக்கதுறை அரசியல்...அண்ணாமலை சூசகம்!!!

தமிழ்நாட்டிலும் அமலாக்கதுறை அரசியல்...அண்ணாமலை சூசகம்!!!

இன்று திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலியில் அமலாக்க துறை ஆளுங்கட்சியின் பொம்மையாக செயல்படுவது குறித்த செய்தி வெளியாகி இருந்தது. அதில் அமலாக்க துறை சோனியாவையும் ராகுலையும் நடத்தும் விதம் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த செய்தி வெளியான இன்றே நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்பட 12 இடங்களில் அமலாக்க துறை அதிரடியாக ரெய்டு மேற்கொண்டுள்ளது.  இது காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்ப்பதாக உள்ளது.

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களிலும் இந்த நிலையே தொடர்கிறது.  தனியொரு நபராக அரசாங்கம் நடத்தி வந்த மம்தாவையே நடுங்க வைத்துள்ளது அமலாக்க துறை ரெய்டு.  எதையும் எதிர்த்து சண்டையிடும் மம்தாவே அவரது எம். பியான பார்த்தாவை கைவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செந்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் செந்தில் பாலாஜி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை ”வெயிட் பண்ணுங்க, அமலாக்கத்துறை கொஞ்சம் பிசியா இருக்காங்க, ஃப்ரீ ஆகிட்டு வருவாங்க. அது வரைக்கும் வெயிட் பண்ணுவோம் “ என்று பேசியுள்ளார். இது அரசியல் வட்டாராங்களில் மிகப் பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது. 

அமலாக்கத்துறை என்பது தன்னிச்சையாக செயல்படகூடியது, அவர்கள் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள் அதற்கு வெயிட் பண்ணுங்க என்று அண்ணாமலை கூறுவதற்கு காரணம் என்ன? ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா?  தமிழ்நாட்டின் தலைமையும் அமலாக்க துறையின் சோதனை என்ற சொல்லுக்கு பயந்து ஆளும் பாஜக விற்கு அடிபணிந்து விடுமா?  தமிழ்நாட்டிலும் தாமரை மலர்ந்து விடுமா? இது போன்ற பல விதமான கேள்விகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.