”பெரியார் மண்” உறுதி செய்யப்படும்...திருமாவை சந்தித்த ஈவிகேஎஸ்...ஆதரவு நிச்சயம்!

”பெரியார் மண்” உறுதி செய்யப்படும்...திருமாவை சந்தித்த ஈவிகேஎஸ்...ஆதரவு நிச்சயம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார்.

காங்கிரஸ்க்கு ஒதுக்கிய தி முக :

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா அண்மையில் உயிரிழந்த நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று ட்ஏர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்கே ஒதுக்கி தி முக அறிவித்தது. 

ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி :

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளாராக ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அறிவித்தது.

இதையும் படிக்க : 35 ஆண்டுகளுக்கு பிறகு...சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்...ஈவிகேஸ் இளங்கோவன்!

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஈவிகேஎஸ் :

இதனைத்தொடர்ந்து, சென்னை அறிவாலயம் சென்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தி. மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பாகவே பிரச்சாரம் தொடங்கிவிட்டதாகவும், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் தெரிவித்தார். 

திருமாவளவனை சந்தித்த இளங்கோவன் :

இந்நிலையில் தி முகவின் கூட்டணி கட்சியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று விசிக தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர், எனக்கு ஆதரவு அளிப்பதாகவும், அந்த தொகுதியில் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாகும் கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

பெரியார் வாரிசாக ஈவிகேஎஸ் போட்டி :

இவரைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ்சின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். மேலும், ஈரோடு பெரியார் பிறந்த மண் சமூக நீதி அரசியல் தோன்றிய மண் அது... பெரியாரின் வாரிசாக ஈ வி கே எஸ் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவது என்பது மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கொடுக்கக்கூடிய பரிசு. இது பெரியார் மண் தான் என்பதை நிரூபிப்பதற்கு அந்த வெற்றி ஒரு சான்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.