துரோகியுடன் உள்ளவர்கள் துரோகிகள் அல்ல..! ஈபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி..!

துரோகியுடன் உள்ளவர்கள் துரோகிகள் அல்ல..! ஈபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி..!
Published on
Updated on
2 min read

ஜூலை 11 பொதுகுழுக் கூட்டம் செல்லாது என தீர்ப்பு வந்தது முதல், ஈபிஎஸ் இன் செல்வாக்கு சற்று குறைந்தது போன்ற பிம்பம் உருவாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு:

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் கட்சியில் பல மாற்றங்கள், நீக்கங்கள் நடந்து.

ஆகஸ்ட் 17 தீர்ப்பு:

அதிமுக பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 17 ஆண்டு வாசித்தார் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன். அதில் ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே தொடரும் எனவும் தீர்ப்பளித்தார்.

அழைப்பு, மறுப்பு:

ஆகஸ்ட் 18 இல் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், நடந்தவை அனைத்தும் நடந்தவையாகவே இருக்கட்டும், அனைவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

துரோகியுடன் எப்படி இணைய முடியும், பன்னீர்செல்வத்துடன் இணைவு என்பது சாத்தியமே இல்லை என திட்டவட்டமாக மறுத்து கூறியிருந்தார் எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

மேல்முறையீடு மனு:

அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் ஈபிஎஸ். அந்த மனு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடரும் விமர்சனங்கள்:

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது ஓபிஎஸ்க்கு சாதகமாக அமைந்ததால், அவரது ஆதரவாளர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். ஈபிஎஸ் மீதான பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ஈபிஎஸ் குறித்தும் அவரது ஆதரவாளர்கள் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

துரோகியுடன் உள்ளவர்கள் துரோகிகள் அல்ல:

துரோகி எடப்பாடி பழனிசாமியை உடன் இருக்கும் ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, தங்கமணி போன்றோர் அவருக்கு துரோகம் செய்யாமல் இருக்கிறார்கள். அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி எனக் கூறியுள்ளார். 

கசிந்து வருவது இனி பற்றி எறியும்:

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம், கொடநாடு கொலை கொள்ளை, பல ஊழல் வழக்குகள் என பல வழக்குகள் கசிந்து வருகிறது, விரைவிலே அது தீ பிடித்து எறியும் என எனக் கூறியதோடு, அது குறித்து விசாரிக்க முதலமைச்சருக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.

திமுக காலில் விழுகிறார்கள்:

நாங்கள் திமுக உடன் தொட்ரபிள் இருக்கிறோம் எனக் கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி, கருணாநிதி குறித்து அரைமணி நேரம் புகழ்ந்து பேசியது அவர் தான், சட்டப்பேரவையில் இது போன்ற ஒரு அமைதியான சட்டப்பேரவையை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை எனக் கூறியது அவருடன் இருப்பவர் தான், அவர்கள் தான் திமுக காலில் விழுகிறார்கள் என சாடிய புகழேந்தி, எதிர்கட்சித் தலைவர் என கூறிக்கொண்டால் மாட்டும் போதாது, அண்ணாமலை எதிர்ப்பதை போல திமுகவை எதிர்க்க துணிவு உண்டா என கேள்வியெழுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com