அதிரடி திருப்பங்களுடன் கூடிய ஈபிஎஸ் பதில்கள் - ஓபிஎஸ் வழக்கில் நடந்தது என்ன?

அதிரடி திருப்பங்களுடன் கூடிய ஈபிஎஸ் பதில்கள் - ஓபிஎஸ் வழக்கில் நடந்தது என்ன?

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுவதற்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடந்தது.

ஈபிஎஸ்ஸிடம் கேட்கப்பட்ட 4 கேள்விகள்:

அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சம் பெற்றுள்ள நிலையில், ஈபிஎஸ்ஓபிஎஸ் இருவருமே சம பலத்தில் சட்டத்தின் முன் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பின்னணியில் தான், ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவைக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்று நடைபெற்ற வாதத்தில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வலுவான ஆதாரங்களை அடுக்கினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஈபிஎஸ் தரப்புக்கு நான்கு கேள்விகளை முன்வைத்தனர். அதாவது, ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டதா? ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ள போது பொதுவக்குழுவை அவைத்தலைவர் எப்படி கூட்ட முடியும்? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும். பொதுக்குழுவை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதில் யார் கையெழுத்து போட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளிக்க வேண்டி வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் தொடங்கிய போது, ஈபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில்,

நிர்வாகிகளைக் கண்டு அஞ்சுகிறார் ஓபிஎஸ்:

அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தங்களுக்கு எதிராக இருப்பதாக கருதி ஓபிஎஸ் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ்-க்கு எதிராக கட்சி நிர்வாகிகள் உள்ளனர் என்ற காரணத்தினாலேயே அவர் நீதிமன்றத்தை நாடி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஈபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.

காலாவதியாகாத பதவிகள்:

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கள் காலாவதி ஆகிவிட்டதாக ஈபிஎஸ் ஆதரவாளர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கூறி வந்தார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், அதிமுகவில் உள்ள ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் காலாவதி ஆகவில்லை என்று கூறப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  எனவே, இடையூறின்றி அதிமுக பொதுக்குழுவை அனுமதிக்க வேண்டும் என்றும் எனவும் ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

விதியைத் திருத்த யாருக்கு அதிகாரம் :

அதிமுகவில் கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது என ஈபிஎஸ் தரப்பில் நீதிபதிகள் முன்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த 2017-ல் பொதுக்குழு விதியைத் திருத்தியதன் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் ஈபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை தடுக்கும் நோக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.