வைர வியாபாரி நீரவ் மோடி...7000 கோடி...இந்தியா திரும்புகிறார்!!

வைர வியாபாரி நீரவ் மோடி...7000 கோடி...இந்தியா திரும்புகிறார்!!

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 7000 கோடி மோசடி செய்த நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடினார்.  லண்டன் சிறையில் உள்ள அவரை இந்தியா கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் செய்து வந்தது.

தப்பி ஓடிய நீரவ் மோடி:

இந்திய தேசிய வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் வைர வியாபாரியான நீரவ் மோடி 7000 கோடி கடன் வாங்கினார்.  பல ஆண்டுகளாகியும் திருப்பி செலுத்தாததால் அது வாராக் கடனாக மாறியது.  இதனால் வங்கியிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் இங்கிலாந்து தப்பியோடினார் நீரவ் மோடி.

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 இன் படி நீரவ் மோடி2019 டிசம்பரில் சிறப்பு நீதிமன்றத்தால் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நீரவ்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நீரவ் மோடி லண்டனில் இருந்து ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் 13 மார்ச் 2019 அன்று கைது செய்யப்பட்ட அவர் தென்மேற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். 

தோல்வியடைந்த பல முயற்சிகள்:

நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வர இந்தியா நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இங்கிலாந்து சிறையில் இருக்கும் நீரவ் மோடி, தன்னை நாடு கடத்துவதைத் தடுக்க பல்வேறு வாதங்களை முன்வைத்து வந்தார்.  

நீரவ் தரப்பு வாதங்கள்:

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியான நீரவ் மோடி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்று இங்கிலாந்தில் உள்ள அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.  மேலும், அவர் இந்தியாவின் சிறைகளில் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளது எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.   இந்த வாதங்களை முன்வைத்து, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்புவதை தடுக்க முயற்சித்தது நீரவ் தரப்பு.  எனினும், முழு விசாரணைக்குப் பிறகு அவரது மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.

இந்தியா தரப்பு கோரிக்கை:

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையின்போது, ​​பிரிட்டனுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது என்று நீதிபதி ராபர்ட் ஜே தெரிவித்தார்.  1992 ஆம் ஆண்டு இந்தியா-இங்கிலாந்து நாடு கடத்தல் ஒப்பந்தத்தை பிரிட்டன் மதிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.  

இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு:

இங்கிலாந்து தப்பியோடிய வைர வியாபாரியான நீரவ் மோடியை இந்தியா அழைத்து வருவதற்கான பெரும் வாய்ப்பு அமைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இங்கிலாந்திலிருந்து நீரவ்வை இந்தியா அனுப்புவதற்கான இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுள்ளது இங்கிலாந்து நீதிமன்றம்.  

இதனை எதிர்த்து நீரவ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது இங்கிலாந்து நீதிமன்றம்.  அவரது அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,  நீரவ்வை நாடு கடத்துவது எந்த வகையிலும் அநீதியாகவோ அல்லது அடக்குமுறையாகவோ இருக்காது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஜி-20ல் தாமரை..தேர்தல் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பாஜக..முற்றும் வார்த்தை போர்..