"இன்றைக்கு அஷ்டமி, நாளை நவமி" தலைவரை அறிவிக்க பஞ்சாங்கம் பார்த்த காங்கிரஸ்!

"இன்றைக்கு அஷ்டமி, நாளை நவமி" தலைவரை அறிவிக்க பஞ்சாங்கம் பார்த்த காங்கிரஸ்!
Published on
Updated on
1 min read

பஞ்சாங்கத்தின் படி இன்றைக்கு அஷ்டமி, நாளை நவமி என்பதால் நாளை மறுநாள் காங்கிரஸ் தலைவரை அறிவிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் சில மாதங்களுக்கு முன்னர்தான் நடைபெற்று மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சில ஆண்டுகளாய் சர்ச்சையாக தொடர்ந்து நீடித்து வந்த இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை அறிவிக்க வேண்டி கட்சிக்குள் பல மாதங்களாக குரல் எழுந்து வருகிறது. தற்போது தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டன. பொதுவாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவது விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேசிய அளவிலான தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததும், தொடர்ந்து சட்ட மன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் தமிழநாட்டில் நடந்துகொண்டிருந்ததாலும் தமிழ்நாட்டின் புதிய தலைவர் யார் என அறிவிக்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி புதன்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோர் இது தொடர்பாக விவாதித்து முடிவை எட்டுயுள்ளதாகவும் ஆனால் பஞ்சாங்கத்தின் படி இன்றைக்கு அஷ்டமி, நாளை நவமி என்பதாமல் இந்த 2 நாட்களை தவிர்த்து நாளை மறுநாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிக்கப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்துத்துவ கொள்கைகளுக்கு தன்னை மாற்றாக கருதிக்கொள்ளும் முற்போக்கான இயக்கமாக தன்னை முன்னிருத்திக் கொள்ளும் காங்கிரஸ் தனது மாநில தலைவரை நியமிக்க பஞ்சாங்கம் பார்ப்பது அரசியல் நோக்கர்களிடையே விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com