”ஆளுங் கட்சியாக இருந்தால் எந்த கதவையும் திறக்கலாமா? மக்கள் உயிரில் சமரசமா?” காங்கிரஸ் கண்டனம்!!!

”ஆளுங் கட்சியாக இருந்தால் எந்த கதவையும் திறக்கலாமா? மக்கள் உயிரில் சமரசமா?” காங்கிரஸ் கண்டனம்!!!

விமான நிறுவனம் எப்படி புகார் செய்தது? ஆளும் பாஜகவின் மேல்தட்டு வர்க்கத்தின் அலட்சியமா இது? இது பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்வதாகாதா?

அவசர கதவும் விசாரணையும்:

கடந்த மாதம் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் அவசர வழியை ஒருவர் தவறுதலாகத் திறந்ததாக தகவல் வெளியானது.  அதை திறந்தவர் அதில் பயணம் செய்த பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வந்த இண்டிகோ விமானம் எண் 6E-7339-ல் நடந்த இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்த டிஜிசிஏ உத்தரவிட்டிருந்தது.  தற்போது வரை விசாரணையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

திறந்தவர் யார்?:

தற்போது கதவை திறந்த பயணி பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் தேஜஸ்வி சூர்யா என தெரிந்தும் இந்த சம்பவத்தை அரசு ஏன் இவ்வளவு காலம் மறைத்தது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.  இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை சூர்யாவோ அல்லது அவரது அலுவலகமோ தற்போது வரை பதில் அளிக்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் கண்டனம்:

இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் தேஜஸ்வி சூர்யாவை காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.  ஏனெனில் அந்த அவசர கதவை திறந்தவர் வேறு யாருமல்ல தேஜஸ்வி சூர்யா தான் என காங்கிரஸ் ட்விட்டரில் ஒரு அறிக்கையை பகிர்ந்துள்ளது.  

காங்கிரஸின் கேள்விகள்:

காங்கிரஸின் சுர்ஜேவாலா ட்வீட் மூலம் இது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.  ”இவர்கள் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள்.  விமான நிறுவனம் எப்படி புகார் செய்தது? ஆளும் பாஜகவின் மேல்தட்டு வர்க்கத்தின் அலட்சியமா இது? இது பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்வதாகாதா?
 ஓ, அப்படியா! பாஜகவின் விஐபிக்கள் பற்றி கேள்வி கேட்க முடியாது! ” எனக் கேட்டுள்ளார்.

இதுகுறித்து டிஜிசிஏ:

விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் மூத்த அதிகாரி, “இந்த விவகாரம் முறையாக தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ரகசிய தகவலும்....கடத்தி வரப்பட்ட தங்கமும்....