நேரத்தை மிச்சப்படுத்தி பிரியாணி வாங்குவது எப்படி?

நேரத்தை மிச்சப்படுத்தி பிரியாணி வாங்குவது எப்படி?

புதிய தொழில்நுட்பம் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தி பிரியாணி வாங்கும் பிரியாணி பிரியர்கள் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

உலகமெங்கும் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டக்கூடிய பொதுமக்கள் பிரியாணி என்றவுடன் தட்டு நிறைய பிரியாணி, கொஞ்சம் வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் அது ஆனந்தத்தின் உச்ச கட்டமாக இருக்கும் என்று சொல்வார்கள். அதிலும் குறிப்பாக BVK (பாய்வீட்டு கல்யாணம் பிரியாணி) முறையில் செய்தால் அதற்கு கூடுதல் சுவை இருக்கும் என்று சென்னை பிரியாணி பிரியர்கள் சொல்கிறார்கள்.

முன்பெல்லாம் நேரடியாக உணவகம் சென்றே ஹோட்டல் உணவுகளை நாம் ஒரு பிடி பிடிப்போம்; பார்செல் என்றாலும் கூட நாமே கடைகளுக்குச் சென்று தான் வாங்கி வருவோம். ஆனால், இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. நேரத்தை குறைக்கும் விதமாக உலக நாடுகளில் இருப்பது போலவே, இந்தியாவில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள BVK பிரியாணி உணவகத்தில் முதன் முறையாக மனிதன் இல்லாமல் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையுடன் எளிதாக பிரியாணி வாங்கும் விதமாக அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிக்க : தோல்வி பயத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அதிமுக... அமைச்சர் பேட்டி!

இந்தியாவில் முதன்முறையாக பி வி கே பிரியாணி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய தொழில்நுட்பத்தில், பிரியாணி வாங்குவதற்கு பிரியாணி பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பிரியாணி, தந்தூரி, மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி என பலவிதமான உணவுகளை டிஜிட்டல் மூலமாக பார்த்து எளிதாக வாங்கி செல்கின்றனர். 

உலகத்திலேயே ஒரு மனிதன் போதும் என்று சொல்லும் ஒரே பொருள் சாப்பாடு தான். மற்ற அனைத்து பொருட்களும் மனிதர்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்று சொல்லமாட்டார்கள். ஆனால் உணவு ஒன்று மட்டும் தான் வயிறு நிறைந்தபின் போதும் என்பார்கள். ஆனால் பிரியாணி பிரியர்கள் போதும் என்று சொல்லும் போது அவர்களின் வயிறு மட்டுமல்லாமல் மனதும் நிறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விதத்தில், பி வி கே பிரியாணி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய தொழில்நுட்பத்தின் மூலம், பிரியாணி வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதும் இல்லை, அதே சமயம் நேரத்தை வீணடிக்க வேண்டியதும் இல்லை என்று கூறி ஆனந்தத்துடன் BVK பிரியாணி உணவகத்தில் பிரியாணி வாங்கி செல்கின்றனர் அசைவ பிரியர்கள்...