சொந்த கட்சிக்காரருக்கு எதிராக கிளம்பும் நட்சத்திரங்கள்..! கே.டி.ராகவனை கழுவி ஊத்தும் நடிகைகள்..!

அரசன் அன்று கொல்வான்..! தெய்வம் நின்று கொல்லும்..!

சொந்த கட்சிக்காரருக்கு எதிராக கிளம்பும் நட்சத்திரங்கள்..! கே.டி.ராகவனை கழுவி ஊத்தும் நடிகைகள்..!

பிஜேபி மாநில செயலாளர் கே.டி.ராகவன் அவங்க கட்சியை சேர்ந்த பெண் ஒருவரிடம் வீடியோ காலில் அரை நிர்வாணமாக பேசி விட்டு அப்படியே பூஜை அறை உள்ளே சென்று ஆபாச வேலைகளை செய்தார்.. அந்த வீடியோ வெளியாகி பரபரப்பானது. வீடியோவில் அந்தப் பெண் என்ன பேசினார்? ராகவனை மயக்குமாறு பேசினாரா? ராகவன் பூஜை அறையில் செய்தவையெல்லாம் பெண் செய்யச் சொல்லி செய்தாரா?  என பல்வேறு கேள்விகளை முன்வைத்து  நம்ம நெட்டிசன்ஸ் வச்சி செய்யுராங்க...

இந்த வீடியோவை யூடியூபர் மதன் என்பவர் தனது யூடியூப் சேனலான மதன் டைரி என்ற பக்கத்தில் பதிவு செய்து, இது நியாயமானதா என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவிய நிலையில், கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் சார்ந்திருந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே அவரை கழுவி கழுவி ஊற்றியுள்ளனர். இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து கூறியதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க, வீடியோவை வெளியிடுங்கள் என தைரியமாக கூறியிருக்கிறார். தனது கட்சியை சேர்ந்தவர் என்றாலும் கூட துணிந்து நடவடிக்கை எடுக்கக் கூறிய அண்ணாமலைக்கு பாராட்டுகள் குவிந்தன. 

அதேப்போல, பாஜகவினர் என்ன செய்தாலும் அது சரி என்பதற்கிணங்க பேசி வந்த சில நட்சத்திர நிர்வாகிகளும் கூட கே.டி.ராகவனின் செயலுக்கு தங்களது கண்டங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் கலைகளுக்கான பாஜக செயலாளராக இருக்கும் காயத்ரி ரகுராம், இந்த சம்பவத்திற்கு இருவேறு ட்விட்களை பதிவிட்டுள்ளார். ஒன்றில், ''காலை எழுந்தவுடன் என் கண்களை என்னால் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடத்திருப்பதாகவும்'', மற்றொரு ட்விட்டர் பதிவில், ''சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டத்தின் முன்னிருந்து தப்பினாலும் தெய்வம் தண்டிக்கும் எனவும், அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்'' என பதிவிட்டுள்ளார். 

அதேபோல, பாஜக நிர்வாகியான நடிகை குஷ்பு, ''தேசிய பாஜகவிலும் சரி தமிழக பாஜகவிலும் சரி எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் இங்கு நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம். அதற்காக பாஜகவில் பெண்களை மதிப்பதே இல்லை என ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம்சாட்டும் போது எனக்கு வேதனை அளிக்கிறது'' என கூறியுள்ளார். ''பாஜகவின் கீழ் ஏராளமான பெண்கள் தலைமை பொறுப்பில் இருந்து வருவதையும்'' அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கிடையில் நடிகை கஸ்தூரி, ''இத்தனை நாள் டிவி விவாதங்களில் கூட முழுசா பாக்கல, இன்னிக்கு சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம் தம்பதி சமேதரா ஒரு நேர்காணல் இப்போ வைரல்.. அதுக்கு கமெண்ட்ஸ் தெரிச்சுக்கிட்டு இருக்கு. இந்த கண்ராவீல் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்பட்டும் அப்பாவி பெண்களை நினைத்தால்'' எனப் பதிவிட்டுள்ள அவர், அழுகின்ற எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்ட மதன் என்பவரின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் இறுதியில் இதேப்போன்று பிஜேபி நிர்வாகிகள் பலரின் வீடியோ வெளியிடப்படும் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.