முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்க அடைக்கலம் கொடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ ....

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்க பா.ஜ.க எம்.எல்.ஏ அடைக்கலம் கொடுத்தது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்க அடைக்கலம் கொடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ ....

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்க பா.ஜ.க எம்.எல்.ஏ அடைக்கலம் கொடுத்தது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துணை நடிகை அளித்த புகாரின்பேரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணிகண்டன் தென் மாவட்டங்களில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையிலிருந்து 2 தனிப்படை போலீசார் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர்  திருநெல்வேலியில் தங்கி இருப்பதாக கிடைத்த  தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அதற்குள் அவர் திருநெல்வேலியில் இருந்து பெங்களூர் சென்று விட்டதாக தெரியவந்தது.இதனை அடுத்து நேற்று காலை பெங்களூர் அருகே ஆனைக்கல் என்கிற பகுதியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் துணை நடிகையை தொழில் ரீதியாக மட்டுமே தெரியும் எனவும் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்வில் ஈடுபடவில்லை எனவும் மணிகண்டன் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பணம் பறிக்கும் நோக்கில் நடிகை செயலபடுவதாகவும்  அவர் நடிகை மீது போலீசாரிடம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லானல் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வீட்டில் பத்து நாட்கள் தங்கி இருந்ததாகவும் அங்கிருந்து உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்படவுள்ளது என தெரிந்து கொண்டதால், பாஜக எம்.எல்.ஏ வின் உதவியுடன் பெங்களூருக்கு தப்பிச் சென்று தங்கியதாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனுக்கு  வருகிற ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பாஜக பிரமுகர் அடைக்கலம் கொடுத்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.