மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்த அண்ணாமலை..நோஸ் கட் செய்த திமுக நிர்வாகி..!

வரலாறு மிக முக்கியம் தலைவரே.. உங்க கட்சிகாரங்க பன்றது மட்டும் தெரியாதே? - வறுத்தெடுக்கும் திமுகவினர்..!

மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்த அண்ணாமலை..நோஸ் கட் செய்த திமுக நிர்வாகி..!

பொன்னியின் செல்வன்: தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கப் போகும் படம் என்றால் அது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் தான். கல்கியின் புகழ்பெற்ற நாவலான இந்த பொன்னியின் செல்வன் கதையை படமாக்க எத்தனையோ இயக்குநர்கள் முயன்றும் முடியாமல் போனது. பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்த கதை தற்போது படமாக்கப்பட்டுள்ளது. 

நட்சத்திர பட்டாளம்: ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் பிரகாஷ்ராஜ், ரஹ்மான், நாசர் இன்னும் பலர் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்திருக்கின்றனர். இரண்டு பாகங்களாக அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

டிரைலரை வெளியிடவுள்ள முதலமைச்சர்: படத்திலிருந்து ஏற்கனவே டீசர், பொன்னிநதி என்ற முதல் சிங்கிள் டிராக், சோழா, சோழா என்ற இரண்டாம் சிங்கிள் பாடல் என அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு டிரைலரை வெளியிடவுள்ளார்.

 அண்ணாமலை விமர்சனம்: தமிழ்நாட்டில் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறதோ இல்லையோ, பாஜகவும், அதன் மாநில தலைவரான அண்ணாமலையும் தான் செயல்பட்டு வந்துகொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலரை முதலமைச்சர் வெளியிட இருப்பதை விமர்சனம் செய்திருக்கிறார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. புதுக்கோட்டையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேடையில் பேசிய அவர், நாட்டில் எந்த ஒரு முதலமைச்சராவது இதுபோன்று பட டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு செல்வார்களா? என கேள்வி எழுப்பினார். அதேபோல அடுத்தடுத்து வரக் கூடிய படங்களுக்கு கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வார் என விமர்சித்திருந்தார் அண்ணாமலை. 

நோஸ்கட் செய்த திமுக நிர்வாகி: இதற்கு சமூகவலைத்தளம் மூலம் பதிலளித்துள்ள திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை, கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு மேடையில் பேசிய வீடியோவை வெளியிட்டு, கர்நாடகா இந்தியாவில் தானே இருக்கிறது? இந்தியாவில் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு சென்ற  முதல்வர். வாட்ஸ்ப் பல்கலைகழகத்தின் முன்னணி மாணவருக்கு சமர்ப்பணம். யார் அந்த மாணவர் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.