முத்தத்திற்கு பயந்து திரைத்துறையை விட்டு ஒதுங்கிப்போன நடிகை நதியா..!

தென்னிந்திய சினிமா கொடி கட்டி பறந்த நதியா, முத்தத்திற்கு பயந்து திரைத்துறையை விட்டு ஒதுங்கிப்போனதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முத்தத்திற்கு பயந்து திரைத்துறையை விட்டு ஒதுங்கிப்போன நடிகை நதியா..!

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானர் நதியா. 

நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான நதியா, அதன் தமிழ் ரீமேக்கான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் நடிகையாக அறிமுகமானார். 

அதற்கு பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகை நதியா, தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். 

இப்படி படுபிசியாக படங்களில் நடித்துக்கொண்டிருந்த நதியா, திடீரென திரைத்துறையை விட்டு காணாமல் போனதுக்கான காரணம் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று எண்ணி, அந்த  பயத்திலேயே நடிகை நதியா நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. 

முன்னணி நடிகராக இருந்த கமலுடன் அறிமுக நடிகையாக இருந்த நதியா நடிக்க மறுத்தது குறித்து பிற்காலங்களில் அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். 
சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட இவர் M குமரன் S/o மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். 

அதன் பின் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் நடிகை நதியா அவர்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து இருக்கிறார்

அப்பொழுது பார்க்கும் போது நடிகை நதியா அவர்கள் எப்படி இருந்தாரோ அப்படியே இப்பவும் காட்சி அளிக்கிறார். ஆனால் அவரது சினிமா கேரியரில் முத்தம் இவ்வாறு விளையாடியுள்ளது குறித்து சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.