விஜயகாந்த் வலது காலில் 3 விரல்கள் நீக்கம்...தொண்டர்கள் ரசிகர்கள் அதிர்ச்சி..!

விஜயகாந்த் உடல்நிலை சமீப காலமாக மோசமாக உள்ள நிலையில்  மருத்துவர்கள் கூறிய தகவல்களால் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜயகாந்த் வலது காலில் 3 விரல்கள் நீக்கம்...தொண்டர்கள் ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிப்பு, அரசியல் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த விஜயகாந்த் ஜெயலலிதா இறப்பதற்கு முன்னாள் வரை தேமுதிக வை பலமான எதிர்கட்சியாகவே இயக்கி வந்தார்.  இப்படி இருந்தவர் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட தேதிமுக கட்சியினர் போட்டியிடவில்லை. மேலும் கட்சி பணிகளை, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது உறவினர்கள் தான் பார்த்து வருகின்றனர். இருப்பினும் அறிக்கைகள், அறிவிப்புகள், கண்டனங்கள் போன்றவைகள் எல்லாம் விஜயகாந்த் பெயரிலேயே வெளியாகிறது.

இப்படி இருக்க, 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், அதன் பின்னர் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் அப்போதிலிருந்தே அவரை காண முடியாமல் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அவ்வப்போது விஜயகாந்தின் புகைப்படங்களை அவரது குடும்பத்தினர் வெளியிட்டு வருகின்றனர்.   

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக விஜயகாந்துக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை கண்டறிந்தனர்.  அதன் பின்னர் கடந்த வாரம் தேமுதிக சார்பில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. "விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் " என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்க தற்போது அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதாலும், அவரது உடல்நிலை மிகுந்த பாதிப்படைந்திருப்பதாலும், மேலும் சில காரணங்களால் அவரது வலது காலில் 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேட்டறிந்த அவரது தொண்டர்கள், சென்னை கோயம்பேடில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், குவிந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பளர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உட்பட பலரும் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.