இந்தியாவில் உருவாகும் ஒரு ஜானி தெப்... உண்மையில் யார் இங்கு தவறு?

நடிகர் நவாசுதீன் சித்திக்-கின் குடும்ப தகராறு பெரும் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், தற்போது தன் பக்க நியாயத்தை முதன் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் உருவாகும் ஒரு ஜானி தெப்... உண்மையில் யார் இங்கு தவறு?

உலக அளவில் ஒரு விவாகரத்து கதை சர்சையைக் கிளப்பியது என்றால், அது ஜானி தெப் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் கதை தான். அதிகபட்ச வழக்குகளில் ஆண்களே வில்லன்களாக இருக்க, பெண்கள் மீதான பார்வையை ஒட்டுமொத்தமாக உலகத்துக்கே மாற்றிக் காட்டியது இந்த வழக்கு.

ஒரு பெண் தனது கணவரைத் தாக்கி அவரை உடலளவிலும் மனதளவிலும் கொடுமை படுத்திய கதையால், உலகமே அதிர்ச்சி அடைந்து அதில் இருந்து இன்றும் பலர் மீளாத நிலையில், மேலும் அப்படி ஒரு கதை அதுவும் இந்தியாவிலேயே உருவாகி வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | காதலரால் தாக்கப்பட்ட நடிகை அனிக்கா....!!

நெபோடிசம் என்ற வார்த்தை கேட்டாலே அது பாலிவுட் தான் என்று கூறிய காலத்தில் எந்த ஒரு பின்னணியும் இன்றி தனது சொந்த உழைப்பால திறமையை மட்டுமே நம்பி சினிமாவுக்குள் நுழைந்த் அனடிகர்களில், இன்று தனக்கென்று ஒரு அடையாளம் பதித்துக் கொண்டவர் தான் நடிகர் நவாசுதீன் சித்திக்.

பல லட்சங்கள் சம்பாதித்து தனது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய நவாசுதீனுக்கு குடும்பத்தில் பெரும் பிரச்சனை நிலவி வருவது நமக்கு சோசியல் மீடியாக்கள் மூலமே தெரிகிறது. நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக், சமீப காலங்களில் பல வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் படிக்க | பாலா படத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில் நடிகையும் விலக்கப்பட்டார்...!!

அதிலும் கடந்த வாரம் அவர் வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலாகி பல விமர்சனங்களைப் பெற்று வந்தது. நள்ளிரவில் தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியிஏ அனுப்பியதாக குற்றம் சாட்டும் அந்த வீடியோ வைரலானதை அடுத்து, அனைவர்ம் நவாசுதீன் பக்கம் திரும்பி அவர் பக்க கதை என்ன என கேட்கத் துவங்கினர்.

இதனையடுத்து, முதன் முறையாக் அனவாசுதீன் தனது கருத்துகளை வெளிப்படுத்தியதோடு, அவரது பிரிந்த மனைவி ஆலியா சித்திக் மீதும் ஒரு சில புகார்களைக் கூறியுள்ளது தற்போது பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | உதவி வேண்டி வீடியோ வெளியிட்ட பிதாமகன் தயாரிப்பாளர்...!!

தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கடந்த 2 ஆண்டுகளாக ஆலியாவுக்கு மாதந்தோறும் சுமார் 10 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாகவும், அவர் தனது 3 படங்களுக்கு வருமானம் ஈட்டுவதற்காக அவருக்கு நிதியுதவி செய்ததாகவும் நவாஸ் தெரிவித்தார்.

அவர் தனது குழந்தைகளை துபாயில் விட்டுச் சென்றதாகவும், கடந்த 45 நாட்களாக பள்ளியில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அதிக பணம் வேண்டும் என்று மிரட்டி இந்த நாடகத்தில் இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தனது குழந்தைகளின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும், நீதித்துறையின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைப்பேன் என்றும் நவாஸ் கூறி குறிப்பை முடித்தார்.

இந்த குறிப்பு தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு நவாசிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும், நவாசுதீன் இந்திய ஜானி தெப்பாக மாறொ விடுவாரோ என தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ”மக்களுக்கு உதவுவதே திருப்தி அளிக்கிறது...” நடிகர் சோனு சூட்!!