பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை வெளியிட்டார் நடிகர் மாதவன்..!

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல் படத்தின் ட்ரைலரையும் படத்தையும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான மாதவன்.

பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை வெளியிட்டார் நடிகர் மாதவன்..!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய உலக சாதனையான இரவில் நிழல் படத்தின் ட்ரைலரையும் படத்தையும் திரையிட்டு உள்ளார். இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் ஆகும். லீனியர் என்பது கதை ஆரம்பித்து ஒரே கோட்டில் செல்வது, அதாவது பிளாஷ் பேக் எதுவுமே இல்லாமல் நிகழ்காலத்தில் மட்டும் நடப்பது. நான் லீனியர் எனபது கடந்த காலம், நிகழ் காலம் என மாறி மாறி வருவது, உதாரணமாக வட சென்னை படத்தை சொல்லலாம். 

நான் லீனியர் படம் என்பது சாதாரணமானது தான். ஆனல் ஒரே ஷாட் இல் எடுப்பது எனபது லீனியர் படங்களுக்கே சற்று கடினம். ஆனால் பார்த்திபன் நான் லீனியர் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளது தான் தற்போது உலக சாதனையாக பார்க்கப்படுகின்றது. இந்தியா மட்டும் இல்லை உலக திரைப்பட இயக்குனர்கள் அனைவருக்கும் இந்த படம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வித்தியாசமான முயற்சிகளை சினிமாவில் பரிசோதனை செய்து பார்ப்பது தான் உண்மையான சினிமா கலைஞனுக்கான அடையாளம். அதில், நடிகர் பார்த்திபன் வித்தகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு நடிகராக நடித்து ஒட்டுமொத்த படத்தையும் புரிய வைத்து பிரம்மிக்க வைத்தார். ஆஸ்கர் போட்டி வரை அந்த படத்தை அனுப்பி வைத்து பலரது பாராட்டுக்களை அள்ளினார் பார்த்திபன். ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு ஆஸ்கர் கிடைக்காத நிலையில், அந்த விருதை எப்படியாவது தட்டிப் பறித்து விட வேண்டும் என்கிற முயற்சியில் தான்  95 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த உலக சாதனை படத்தை எடுத்து அசதி இருக்கிறார். 

இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதன் இசை தரம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க வைத்துள்ளார். மேலும், ஆஸ்கர் வென்ற மூவர் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட போது கோபத்தில் பார்த்திபன் மைக்கை தூக்கி எரிந்தது பேசு பொருளானது. அந்த  டீஸரிலேயே படத்தின் கதை என்ன எனபது புரிந்து விட்டது. பார்த்திபன் தான் குழந்தையாக இருந்தது முதல் நிகழ் காலத்தில் நடப்பது வரை தான் அனுபவித்த வாழ்க்கையை தான் பிளாஷ் பாக் காட்சிகளாக கொண்டு வந்து இருக்கிறார். 

64 ஏக்கல் நிலத்தில் சுமார் 50 செட்கள் போடப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பை பல நாட்கள் ரிஹர்ஸல் செய்து ஒரு வழியாக ஷூட்டிங்கிற்கு சென்றாராம் நடிகர் பார்த்திபன். ஆனால், ஒருவர் மிஸ்டேக் செய்தால் கூட படத்தை முதலில் இருந்து எடுத்தால் மட்டுமே சிங்கிள் ஷாட் படம் என்கிற சாதனையை படைக்க முடியும் என்பதால், 22 டேக்குகளுக்கு பிறகு 23வது டேக்கில் படம் நிறைவடைந்ததாக கூறுகின்றனர். 95 நிமிடங்கள் பல நாட்கள் அனைத்து நடிகர்களும் அப்படியே நடித்ததில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

டீசேரிலேயே தெரிந்து விட்டது இதில் நிறைய ஆபாச வசனங்கள் உண்டு எனபது, அதற்கு மியூட் போடப்படும்  என்றும் கூறி இருந்தார் பார்த்திபன்.. இந்த நிலையில்  கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டில் நடந்த பார்த்திபன்,  நடிகரும் இயக்குனருமான மாதவன் வெளியிட தனது இரவின் நிழல் படத்தின் ட்ரைலர் மற்றும் படம் வெளியிட்டு உள்ளார். 

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், ஆனந்த விகடன் தான் முதன்முதலில் என் முதல் பட விமர்சனத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்குமென ஆரூடம் சொன்னது. இன்றது பலிக்கிறது கண்கள் பனிக்கிறது. இங்கு நேரப்படி 2.29-க்கு திரைப்படமும்,4.44-மணிக்கு டிரைலரும் வெளியிடப்படும்
இந்திய நேரம் முறையே 5.59pm&8.14pm
வாழ்த்துங்கள்!

படம் வெளியீட்டிற்கு பிறகு தனது த்விட்டேர் பக்கத்தில் இரவின் நிழல் படத்தை நான் வெளியிட்டதற்கு பெருமை கொள்கிறேன் எனவும், பார்த்திபனுக்கு நன்றியும் கூறி உள்ளார் மாதவன். அதற்கு பதில் அளித்துள்ள பார்த்திபன், மா தவம் செய்திடல் வேண்டும் rocketry biopic இயக்க. Thanks for your support.
Pls c film என பதிவிட்டு உள்ளார். மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி தி நம்பி எபெர்ட்ஸ் படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரை இடப்பட்டுப் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.