சமாச்சார மேட்டரில் சார்பட்டா நாயகன்!! பல பெண்களை ஏமாற்றிய ஆர்யா..!!

சமாச்சார மேட்டரில் சார்பட்டா நாயகன்!! பல பெண்களை ஏமாற்றிய ஆர்யா..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா, சமூகவலைத்தளத்தின் மூலம் அறிமுகமான இலங்கையைச் சேர்ந்தவர் வித்ஜா எண்ணற்ற பெண்ணுடன்  2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பேசிய ஒரே மாதத்திலேயே அதாவது ஏப்ரல் மாதமே வித்ஜாவிடம் காதலை சொல்லியிருக்கிறார். வித்ஜாவும் அதை ஒப்புக்கொண்டு இருவரும் பேசியிருக்கிறார்கள். வீடியோ கால், சாட் மூலமாகவே பேசி பழகியிருக்கிறார்களே தவிர நேரில் இதுவரை சந்தித்தது இல்லை.

ஜெர்மனியில் குடியுரிமை பெற்றுக்கொண்டு அங்குள்ள சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் இவருடன், நடிகர் ஆர்யாவும், அவரின் அம்மாவும் வீடியோ காலில் பேசும்போது டாக்டர் வித்ஜாவைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கின்றனர். ஆனால் நடிகர் ஆர்யா அவரைத் (டாக்டர் வித்ஜா) திருமணம் செய்துகொள்ளாமல், பாலிவுட் நடிகர் திலிப் குமார் பேத்தியுமான நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்கும் 17 வயது வித்தியாசம்.


தனியார் தொலைக்காட்சி ஒன்றில், திருமணம் செய்து கொள்ள இந்த நிகழ்ச்சி மூலமாக பெண்ணை தேர்ந்தெடுக்க போவதாக ஆர்யா சொல்லியிருந்ததும் பின்பு அது வெறும் நிகழ்ச்சியாகவே முடிந்ததும். அப்போது அந்த சமயத்தில் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இதற்கிடையே ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண்,நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி, அன்பை காட்டி 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  நடிகர் ஆர்யாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் கூறி வித்ஜாவிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறியிருக்கிறார். அதை நம்பி 2018-ம் ஆண்டில் பணத்தை அனுப்பிவைத்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டில், ஆர்யா தான் சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல், பின்பு சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். சாயிஷாவுடனான திருமணம் குறித்து ஆர்யாவிடம் வித்ஜா கேள்வி எழுப்பியபோது, சாயிஷாவின் பெற்றோர் தனது கடன்கள் அனைத்தையும் செலுத்துவதாக உறுதியளித்ததால் மட்டுமே அவர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக கூறியதாகவும், ஆறு மாதங்களுக்குள் சாயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் மட்டுமே, தான் அந்த திருமணத்துக்கு சம்மதித்ததாக வித்ஜா நீதிமன்ற வழக்கில் தெரிவித்திருந்தார்.

"நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக வித்ஜா பிரதமர் அலுவகத்தில் முன்பு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரோடு ஆர்யாவுடன் பேசியது, பணம் அனுப்ப சொல்லி அவர் கேட்டது, பின்பு வித்ஜா பணம் அனுப்பியதற்கான சான்று உள்ளிட்டவையும் அந்த புகாரில் இணைக்கப்பட்டிருந்தது."

"இதை தமிழ்நாடு தலைமை செயலளாளருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். இது சைபர் க்ரைம் பிரிவுக்கு சென்று அங்கு இதனை விசாரித்து இருக்கிறார்கள். பின்பு, இது சிபிசிஐடி வசம் சென்று மீண்டும் சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்திருக்கிறது."

இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்யா முன் ஜாமீன் கேட்டிருந்தார். எங்கள் தரப்பில் மனுதாரரிடம் பணம் வாங்கி ஏமாற்றி, மிரட்டிய காரணத்தால் முன் ஜாமீன் ஆர்யாவுக்கு வழங்கக்கூடாது என கேட்டிருந்தோம். இதற்கிடையில் ஆர்யா நடித்த வெளிவரக் காத்திருந்த படங்களான 'சார்பட்டா பரம்பரை', 'அரண்மனை-3', 'ரெண்டகம்' ஆகிய படங்கள் வெளிவரக்கூடாது எனவும் கேட்டிருந்தோம்."

"இதனையடுத்து, வழக்கை தற்போது விசாரித்து ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். இதற்கு நேற்று நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி விசாரணையில் பதில் சொல்லியிருக்கிறார். தற்போது வழக்கை வருகின்ற ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

வித்ஜா ஜெர்மனியில் வசித்து வரும் 28 வயதான தமிழ்ப்பெண். அவர் ஒரு கார்டியாலஜிஸ்ட். கடந்த 2018ம் வருடம் மார்ச்சில் ஆர்யாதான் முதலில் வித்ஜாவை சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பேசிய ஒரே மாதத்திலேயே அதாவது ஏப்ரல் மாதமே வித்ஜாவிடம் காதலை சொல்லியிருக்கிறார். வித்ஜாவும் அதை ஒப்புக்கொண்டு இருவரும் பேசியிருக்கிறார்கள். வீடியோ கால், சாட் மூலமாகவே பேசி பழகியிருக்கிறார்களே தவிர நேரில் இதுவரை சந்தித்தது இல்லை.

தனக்கு நிறைய பணப் பிரச்னைகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தால் படங்கள் இல்லாததால் பணம் தேவைப்படுவதாகவும் சொல்லி ஆர்யாவும் அவரது அம்மா ஜமிலாவும் வித்ஜாவிடம் தங்களது குடும்ப உறுப்பினராக எண்ணி பணம் தந்து உதவுமாறும், ஆர்யா படங்கள் ஒப்புக்கொண்டு விட்டால் திரும்ப தந்து விடுவதாகவும் சொல்லி கிட்டத்தட்ட 80,000 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70,40,000) பணம் வாங்கியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் சாயிஷாவுடன் திருமணம் என செய்தி கேள்விப்பட்டு வித்ஜா ஆர்யாவிடமும் அவரது அம்மாவிடமும் இது குறித்து கேட்டிருக்கிறார்.

அதற்கு ஆர்யாவின் அம்மா, "அவளை எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தற்போதுள்ள கடன் பிரச்னைகளை சாயிஷா குடும்பம் பணம் கொடுத்து சமாளிப்பதாக சொல்லியதன் காரணமாகவே ஆர்யாவுடைய அப்பா ஒப்புக் கொண்டார். இது ஒரு ஷூட்டிங் கல்யாணம் போலதான். ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு உன்னைத்தான் திருமணம் செய்து வைப்போம்" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்," என்கிறார் வழக்கறிஞர் ஆனந்தன்.

"ஆனால், இதில் சமாதானம் அடையாத வித்ஜா தன்னுடைய பணத்தை திருப்பி கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். அதற்கு அவரை மிரட்டும் விதமாக, 'பணம் வராது, உன் வீட்டிற்கு ஆள்தான் வரும்' என சொல்லி மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் வித்ஜாவுக்கு ஆர்யா இது போன்று பல பெண்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த அனைத்து குறுஞ்செய்திகளுமே ஆர்யா மற்றும் அவரது அம்மாவின் மொபைலில் இருந்துதான் அனுப்பப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் 130 பக்கங்கள் கொண்ட ஆதாராமாக சைபர் க்ரைமில் இருந்து எடுத்து இருக்கிறார்கள். இதனை வைத்தே வித்ஜா வழக்கு பதிவு செய்திருக்கிறார்" என்றார் அவரது வழக்கறிஞர் ஆனந்தன்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் இருந்து ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, ஆர்யா சமீபத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நேரில் ஆஜராகியுள்ளார். ஆனால் இது குறித்து நடிகர் ஆர்யா தரப்பு இன்னும் கொட்டாவி விடக்கூட வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.