அடிமைகளை விற்கும் APP  நவீன அடிமை வர்த்தகம்... திடுக்கிடும் உண்மைகள்....!!! 

அடிமைகளை விற்கும் APP  நவீன அடிமை வர்த்தகம்... திடுக்கிடும் உண்மைகள்....!!! 

வலியவை தான் உயிர் பிழைக்கும் என்பது இயற்கை நியதி அதனால் தான் பணத்திலும் பலத்திலும் வலிமை மிக்க மனிதர்கள் பிற மனிதனை ஒடுக்கி வாழுகின்றனர். இப்படி சகமனிதனை அடிமைப்படுத்தும் செயல் கிரேக்கம் சுமேரியன் எகிப்தியன் என்று உலகெங்கிலும் உள்ள அணைத்து சமூக கலாசாரத்திலும் காணப்படக்கூடிய ஒன்று, பின்பு நாகரீகம் பெருமளவில் வளர தொடங்கிய பிறகு பல நாடுகளில் இருந்த அடிமை வர்த்தகம் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது . 

இந்தியாவில் பலகாலமாக இருந்துவந்த அடிமைத்தனம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்ட இந்திய அடிமைச் சட்டம் V 1843, அடிமைத்தனத்துடன் தொடர்புடைய பல பொருளாதார பரிவர்த்தனைகளை சட்டவிரோதமாக்கியது. அதேபோல். அடிமை வர்த்தகம் சட்டரீதியாக அமலில் இருந்த அமெரிக்காவிலும் கூட 1865 இல், அதிகாரப்பூர்வமாக அடிமைத்தனத்தை ஒழித்த்து, 100,000 க்கும் மேற்பட்ட அடிமைகளை உடனடியாக விடுவித்தது. மேலும் மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு எதிராகவும் அல்லது  மிரட்டலின் பெயரில் உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்க அணைத்து நாடுகளிலும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைக்கான சட்டங்கள் பிறப்பிக்க பட்டன.

இதனால் அடிமைவார்த்தகம் பெருமளவில் குறைக்கப்பட்டதாகத்தான் உலகம் நம்பிக்கொண்டு வருகிறது ஆனால் இந்த அடிமைமுறை நவீன போக்கிற்கு டொமெஸ்டிக் லேபர் DOMESTIC LABOUR என்ற பெயரில் உருமாறி வேறுவழியில் இயங்கிக் கொண்டுதான் வருகிறது. கிட்டத்தட்ட மூன்றரை கோடி நபர்கள் குடியிருப்புகளை சுத்தம் செய்வது, கனிமங்களை தோண்டி எடுப்பது 2022 கத்தார் உலகக் கோப்பைக்கான கட்டுமானப் பணிகளுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற பல வேளைகளில் அரசாங்க துஷ்பிரயோகதின் காரணமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டாய உழைப்பில் தங்கள் விருப்பத்திற்கு எதிராகவும், அச்சுறுத்தல், மிரட்டல் அல்லது வற்புறுத்தலின் பெயரிலும் போதிய ஊதியம் இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.அதே சமயம் கட்டாய உழைப்பில் பணிபுரியும் பெண்களில் 48 லட்ச பேர் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, 

இவர்களில் பெரும்பாலானோர்  பிலிப்பைன்ஸ்  கிழக்கு ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், அல்லது இந்தியர்கள் தான். ஒரு சிறந்த வாழ்க்கைக்கு உறுதியளிக்கப்பட்டு, மாறாக கடன் மற்றும் சுரண்டலின் சுழற்சியில் அடிமை வர்த்தகத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.  இந்த உலகளாவிய அடிமைத்தனம் ஊழல் கட்டுப்படுத்தப்படாமல், சட்டத்தின் ஆட்சி பலவீனமாக இருக்கும் இடங்களில் செழித்து வளர்கிறது என சர்வதேச அடிமை எதிர்ப்பு அமைப்பு கூறுகிறது. அதை தொடர்ந்து அடிமை முறை நிபுணரான சித்தார்த் காராவின் கூற்றுப்படி, இன்று ஒரு அடிமையின் விலை 34 ஆயிரம் என்றும் ஒரு கட்டாயத் தொழிலாளி சுரண்டப்படுவது மூலம் ஆண்டிற்கு  6 லட்சம் வருமானத்தை அவன் எஜமானருக்கு அளிப்பதாகவும் அதே நேரத்தில் பாலியல் கடத்தல்காரர்கள் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் மூலம் ஆண்டிற்கு சராசரியாக 27 லட்சம்  சம்பாதிக்கிறார்கள் என்றும் சித்தார்த் மதிப்பிடுகிறார். இப்போதுள்ள நவீன அடிமை வியாபாரிகள் ஈட்டும் லாபம் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் வாழ்ந்த ஆதிக்கவாதிகள் ஈட்டிய லாபத்தைவிட விட 30 மடங்கு அதிகம் என்று தெரிகிறது.

ஆண்டிற்கு 15 ஆயிரம் கோடி வருமானம் தரக்கூடிய இந்த அடிமை வர்த்தகம் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்க அந்நாட்டு சட்டமே துணைபுரிகிறது. உதாரணத்திற்கு மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் அமலில் உள்ள கஃபாலா (KAFFELA ) வேலைவாய்ப்பு திட்டம் ஒரு தனிநபர் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஸ்பான்சர் செய்து அவர்களை வேளைக்கு அமர்த்த அனுமதிக்கிறது. அதே சமயத்தில் தொழிலாளர்களின் மொத்த உரிமையும் எஜமானர்களையே சேரும் என்றும், அத்துடன் அவர்களின் மீதுள்ள உரிமத்தை பிற எஜமானர்களுக்கு விற்கவும் வாங்கவும் இச்சட்டம் அனுமதிக்கிறது அதனால் தொழிலாளிகள் மனித உரிமை மீறல்கள், இனவெறி மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றின் காரணமாக கஃபீலின் அதாவது எஜமானரின் அனுமதியின்றி வெளியேறினால் குற்றவியல் தண்டனைகள், காலவரையற்ற தடுப்புக்காவல் மற்றும் நாடு கடத்தல் போன்ற குடியேற்றக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று இச்சட்டம் சொல்வதால் பெரும்பாலான தொழிலாளர்கள் நவீன அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .

சமீபத்தில் குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இதை ஆதரிக்கும் வகையில் FORSALE, HARAJ, INSTAGRAM போன்ற  பல ஆப்ஸுகள் இணையதளங்களில் அடிமைகளை வாங்கவும் விற்கவும் செயல்பாட்டில் உள்ளது, கூகிள் ஆப்பிள் போன்ற அணைத்து தளங்களில் இது கிடைக்கப்பெறுகிறது அதனை ஒழிக்க இந்நிறுவனகள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அடிமை வர்த்தகத்தின் மூலம் அதிகம் பாதிக்கப்படுகிற நாடுகளில்  சீனா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் முதல் 10 இடங்களை பிடிக்கின்றது இதிலிருந்து உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது  60% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலகளாவிய அடிமைக் கணக்கீடு விகிதம் தெரிவிக்கிறது. 

நம்மில் பெரும்பான்மையோர் அடிமை வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அனால் சிலர் குடும்பங்களை பிரிந்து அடிமைவழக்கை தான் என்பதை தெரிந்தே வாழ்ந்து கொண்டிருப்பது தான் உலகின் கோரா முகத்தை காட்டுகிறது.