முன்னாள் அமைச்சர் காமராஜ் ரெய்டில் இவ்வளவு சிக்கியதா பணம்...

முன்னாள் அமைச்சர் காமராஜ் ரெய்டில் இவ்வளவு சிக்கியதா பணம்...

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜின் எப்.ஐ.ஆர் விவரம் வெளியாகியுள்ளன. அத்துடன் பத்திரிக்கை செய்தியும் வெளியாகியுள்ளது.

எப்.ஐ.ஆர் விவரங்கள்:

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 6 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைகேடாக சம்பாதித்த பணத்தை மகன்களின் நிறுவனத்தை நடத்தவும், NARC ஹோட்டல் சொத்துக்களை வாங்கி கட்டுமானம் செய்வதற்காகவும் பயன்படுத்தியுள்ளார். அப்படி முறைகேடாக வந்த காமராஜ் மற்றும் அவரது மகன்களின் சொத்து மதிப்பு கடந்த 2015ஆம் ஆண்டில் 1.39 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் 60.24 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன்படி பார்த்தால் கடந்த 2015 - 2021 வரை காமராஜ் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய 6 பேரின் வருமானம் 12.99 கோடி ரூபாயாகவும், செலவு 12.59 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. வருமானம் செலவை தாண்டிப் பார்க்கும் போது 58.84 கோடி ரூபாய் மதிப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது தெரியவந்துள்ளதாக அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கை செய்தி:

அதிமுகவின் முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை பேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து அவர் வருமானத்திற்உ அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58,44,38,252/- அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளது  தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், இந்த விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப்பிரிவுகளின் படி அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், இனியன், இன்பன், சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் மீது 07.07.2022 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கினை தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதாக பத்திரிக்கை செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.