தண்ணீரில் செல்லும் கார்.... வாங்க பயணிக்கலாம்!!!

தண்ணீரில் செல்லும் கார்.... வாங்க பயணிக்கலாம்!!!

துபாயில் கார் வடிவில் உருவாக்கப்பட்ட ஜெட் படகுகளில் சவாரி செய்வதற்கு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

ஆடம்பரமான துபாய்:

துபாய் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றது.  வானளாவிய கட்டிடங்கள் முதல் பணக்காரர்களுக்கான ஆடம்பரமான பொம்மைகள் வரை, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் உள்ளதைப் போல தோற்றமளிக்கும் ஸ்போர்ட்ஸ் கார்-வடிவமைக்கப்பட்ட வேகப் படகுகள் உட்பட அனைத்தையும் இந்நகரம் கொண்டுள்ளது.

சுற்றுலா மேம்பாடு:

துபாய் அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.   அந்த வகையில் உலகின் முன்னனி சொகுசு கார்களின் மாடல்களை அடிப்படையாக கொண்டு ஜெட் படகுகளை வடிவமைத்துள்ளது. 

வரவேற்பு:

ஜெட் ஸ்கை இயந்திரங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த படகுகள் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெட்ஸ்கை படகுகள்:

ஜெட்ஸ்கை/படகு கார்களின் கருத்து புதியதல்ல.  புதிய நீர் விளையாட்டு அனுபவத்தை உருவாக்க விரும்பிய எகிப்தைச் சேர்ந்த பொறியாளர் கரீம் அமீனின் யோசனையின் அடிப்படையில் இந்த தண்ணீரில் செல்லும் கார் உருவாக்கப்பட்டுள்ளது.  கரீம் அவரது வடிவமைப்பை துபாய்க்கு எடுத்துச் சென்று, அங்கு கொர்வெட்ஸ் மற்றும் ஃபெராரிஸை அடிப்படையாகக் கொண்ட வேகப் படகுகளுக்கான கருத்தை விரிவுபடுத்தி இந்த படகை உருவாக்கியுள்ளார்.

படகு பயணம்:

இந்தி ஒன்றை நீங்கள் வாங்க எண்ணினால் அதன் விலை சுமார் நாற்பதாயிரம் டாலர் அல்லது சிறிது நேரம் பயணம் செய்ய மட்டும் விரும்பினால் ஒரு மணி நேரத்திற்கு வாடகை 700 டாலர்.  இது பணக்காரர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு அம்சம். ஆனால் தண்ணீரில் ஓட்டுவது வேடிக்கையாக இருப்பதாகவே தோன்றுகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் சூர்யா மற்றும் பாரத்.....