8 எம்.எல்.ஏக்களை வளைத்த சசிகலா,..போனிலேயே நடந்து முடிந்த டீல்,..அதிர்ச்சியில் எடப்பாடி.! 

8 எம்.எல்.ஏக்களை வளைத்த சசிகலா,..போனிலேயே நடந்து முடிந்த டீல்,..அதிர்ச்சியில் எடப்பாடி.! 

தற்போதைய கொரோனா பாதிப்பை தாண்டி அதிமுக தரப்பை கொதிக்கவைத்துக்கொண்டிருக்கும் சம்பவம் சசிகலாவின் ஆடியோ தான். முதலில் ஆடியோ வெளியிட்ட போது அதிமுக தரப்பில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து ஆடியோக்கள் வர அதிமுக கூடாரத்தில் பூகம்பமே வெடித்துள்ளது. 

அதிலும் சசிகலாவின் இந்த ஆடியோக்களால் பன்னீர் தரப்பு குஷியாக எடப்பாடி தரப்போ கடும் பீதியில் இருக்கிறது. தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்குவதாக அறிவித்ததால் இனி ஓ.பி.எஸ்ஸை மட்டும் சமாளித்தால் போதும் என்றே எடப்பாடி இருந்துள்ளார். அதன் காரணமாக தான் எதிர்கட்சி தலைவர் பதவியை கூட ஓ.பி.எஸ்க்கு விட்டுக்கொடுக்காமல் தானே வைத்திருந்தார். இந்த சம்பவங்களால் ஓ.பி.எஸ் தரப்பு கடும் அதிருப்தியாகி சசிகலா பக்கம் ஒதுங்கியிருக்கிறது.

ஓ.பி.எஸ் தரப்பின் ஆதரவும் கிடைத்ததால் குஷியான சசிகலா, எடப்பாடியை நேரடியாக தாக்க முடிவெடுத்துள்ளார். இதன் வெளிப்பாடு தான் அவர் வெளியிட்டு வரும் இந்த ஆடியோக்கள். இந்த ஆடியோக்கள் தொண்டர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாகியுள்ளது. இந்த ஆடியோவை தொடர்ந்து சசிகலாவின் கவனம் தற்போதைய எம். எல்.ஏக்கள் பக்கம் திரும்பியுள்ளது. 

அதன்படி சசிகலா அனுப்பிய டீம் பல எம். எல்.ஏக்களை சந்தித்துள்ளது. அப்படி சந்தித்ததில் ஒரு 10 எம். எல்.ஏக்கள் கொஞ்சம் பாசிட்டிவாக பேச அவர்களிடம்  சசிகலாவே தொலைபேசியில் பேசியுள்ளார். அவர்  பேசியதில் 8 எம். எல்.ஏக்கள் சசிகலா பக்கம் வர இரண்டு பேர் மட்டும் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார். இந்த தகவல் எடப்பாடிக்கு சென்றுள்ளதாவும், எடப்பாடியும் அந்த 8 எம். எல்.ஏக்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

கொரோனா பாதிப்பு முடிந்து சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் போது மேலும் சில எம். எல்.ஏக்கள் அவர் பக்கம் வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.